அறிமுகம்: ரூ.15,900/- முதல் 3 சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள்.!

எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது வெள்ளி, பிளாக், ப்ளூ மற்றும் பிங்க் வண்ண விருப்பங்கள் கிடைக்கும். எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது வெள்ளி, பிளாக், ப்ளூ மற்றும் கோல்ட் நிறங்களில் வரும்.

|

நீண்ட இடைவெளிக்கு பின்னர், சோனி நிறுவனம் அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன்களான எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2, எக்ஸ்பீரியா ஏக்ஏ2 அல்ட்ரா மற்றும் எக்ஸ்பீரியா எல்2 ஆகிய ஸ்மார்ட்போன்களை லாஸ் வேகாஸில் நிகழ்ந்த சிஇஎஸ்2018 நிகழ்வில் அறிவித்தது. சோனியின் மார்க்கெட்டை மீண்டும் ஒரு நல்ல நிலைப்பாட்டிற்கு கொண்டுவருமென எதிர்பார்க்கப்படும் இந்த மூன்று எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அறிமுகம்: ரூ.15,900/- முதல் 3 சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள்.!

எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2, எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களும் வருகிற பிப்ரவரி தொடங்கி விற்பனையை தொடங்குமென்பதும், எக்ஸ்பீரியா எல்2 ஆனது இந்த ஜனவரி முதலே சந்தையில் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆக மொத்தம், வருகிற பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் வாங்க கிடைக்கும்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

ஏற்கனவே இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் அதன் அமெரிக்க விற்பனைக்கான முன்பதிவிற்கு திறந்துவிடப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது சுமார் ரூ.22,260/- க்கும், சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது சுமார் ரூ.28,620/-க்கும் மற்றும் எக்ஸ்பீரியா எல்2 ஆனது சுமார் ரூ.15,900/-க்கும் இந்திய சந்தையில் அறிமுகமாகலாம்.

வண்ண விருப்பங்கள்

வண்ண விருப்பங்கள்

எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது வெள்ளி, பிளாக், ப்ளூ மற்றும் பிங்க் வண்ண விருப்பங்கள் கிடைக்கும். எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது வெள்ளி, பிளாக், ப்ளூ மற்றும் கோல்ட் நிறங்களில் வரும். சோனி எக்ஸ்பீரியா எல்2 ஆனது கருப்பு, தங்கம் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் வரும்.

Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)
டிஸ்பிளே

டிஸ்பிளே

அம்சங்களை பொறுத்தமட்டில், சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது 5.2 அங்குல டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதே நேரத்தில் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது 6.0 அங்குல திரை கொண்ட முழு எச்டி தீர்மானம் (1920 x 1080 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டு வருகிறது.

ரேம்

ரேம்

எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஸ்மார்ட்போன் ஆனது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு மூலம் இயங்க மறுகையில் உள்ள எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி / 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு வருகிறது.

ஸ்னாப்ட்ராகன்

ஸ்னாப்ட்ராகன்

எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 மற்றும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆகிய இரண்டு கருவிகளுமே ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 630 ப்ராசஸர் உடனான 2.2ஜிகாஹெர்ட்ஸ் ப்ரொஜெக்ட் அட்ரெனோ 308 ஜிபியூ உடன் இணைந்து இயங்கும்.

23 மெகாபிக்சல் பின்புற கேமரா

23 மெகாபிக்சல் பின்புற கேமரா

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 4கே பதிவு ஆதரவு கொண்ட 23 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது. இது நொடிக்கு 120 ப்ரேம்களை கைப்பற்றும் ஸ்லோ மோஷன் வீடியோ ஆதரவும் கொண்டுள்ளது.

16 மெகாபிக்சல் டூயல் செல்பீ கேமரா

16 மெகாபிக்சல் டூயல் செல்பீ கேமரா

முன்பக்கத்தை பொறுத்தமட்டில் எக்ஸ்பீரியா ஏக்ஏ2 அல்ட்ரா ஆனது 16 மெகாபிக்சல் டூயல் செல்பீ கேமராக்களை கொண்டுள்ளது, இதுவும் 4கே வீடியோக்களை பதிவு செய்யக்கூடிய திறன் கொண்டது. எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கன 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ

சமீபத்திய ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயக்க முறைமையின்கீழ் இயங்கும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே கேட்13 / 12 பேண்ட், வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஜாக், 4ஜி எல்டிஇ ஆகிய இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.

பரிமாணங்கள்

பரிமாணங்கள்

எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது ஒரு 3580எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்க, மறுகையில் உள்ள சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி மூலம் இயங்கும். பரிமாணங்களில், எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஆனது 142 x 70 x 9.7 மிமீ மற்றும் 178 கிராம் எடை கொண்டிருக்க, எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஆனது 163 x 80 x 9.5 மிமீ மற்றும் 210 கிராம் எடையும் கொண்டுள்ளது.

பட்ஜெட்-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன்

பட்ஜெட்-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன்

ஒரு பட்ஜெட்-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் மற்றும் இரண்டு எக்ஸ்ஏ சாதனங்களைவிட சற்று குறைந்த அம்சங்களை கொண்டிருக்கும் சோனி எக்ஸ்பீரியா எல்2 ஸ்மார்ட்போன் ஆனது 1280 x 720 என்கிற பிக்ஸல் திரை தீர்மானம் கொண்ட 5.5 அங்குல எச்டி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது.

3 ஜிபி ரேம்

3 ஜிபி ரேம்

உடன் மாலி டி720-எம்பி2 ஜிபியூ உடனான 1.5ஜிகாஹெர்ட்ஸ் மீடியா டெக் எம்டி6735பி க்வாட்-கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்க ஆதரவும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
சோனியின் மார்க்கெட்டை மீண்டும் ஒரு நல்ல நிலைப்பாட்டிற்கு கொண்டுவருமென எதிர்பார்க்கப்படும் இந்த மூன்று எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களின் விலை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. On the camera front, both the smartphones will bear the same rear camera of 23-megapixel with 4K recording and can capture 120 FPS slow-motion clips.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X