டூயல் செல்பீ கேமராவுடன் வெளிவரும் புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா.!
2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 630 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் தற்சமயம் சீன வலைதளத்தில் வெளிவந்துள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் டூயல் செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பிரைமரி கேமரா முந்தைய எக்ஸ்ஏ1 அல்ட்ரா மாடலை விட சற்று வித்தியாசமானது என்று கூறப்படுகிறது.
அதன்பின்பு எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, எச்4233 என்ற குறியீட்டு பெயரில் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 630 செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட எக்ஸ்பீரியா ஆர்1 மற்றும் ஆர்2 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் முறையே ரூ.12,990 மற்றும் 14,990 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது.

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு (1280x1080)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.
சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும்.


Click it and Unblock the Notifications