ரூ.19,900/-க்கு இதைவிட வேறென்ன அம்சங்கள் வேண்டும், இதுவே அதிகம்.!
உங்களின் பட்ஜெட் ரூ.20,000/- ஆக இருந்தால் கவலையே வேண்டாம். உங்களுக்கு எந்தவிதமான குழப்பமும், கூடுதல் விலையும் இன்றி உங்களுக்கான சிறந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.!
ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் முடிவு செய்து ஸ்மார்ட்போன் வாங்குவதென்பது மிகவும் சவாலான விடயமாகும். ஏனெனில் ரூ.10,000/- என்று பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன்கள் தேடினால் ரூ.13,000/- உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் கருவி கிடைக்கும், அதேபோல ரூ.15,000/-க்கு தேடினால் ரூ.18,000/- வாக்கில் கிடைக்கும். கூட ஒரு ரூ.3000/- சேர்த்தால் வாங்கிடலாம்" என்ற மனநிலை ஏற்படும்.
ஒருவேளை உங்களின் பட்ஜெட் ரூ.20,000/- ஆக இருந்தால் கவலையே வேண்டாம். உங்களுக்கு எந்தவிதமான குழப்பமும், கூடுதல் விலையும் இன்றி உங்களுக்கான சிறந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம். ஏனெனில் சோனி எக்ஸ்பீரியா ஏக்ஏ1 கருவி ரூ.19,900/-க்கு கிடைக்கிறது.

டிஸ்ப்ளே
சோனி இந்தியா அதன் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. ரூ.19,990/- என்ற விலை நிர்ணயம் கொண்ட இக்கருவி ஒரு 5 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

நௌவ்கட்
3ஜிபி ரேம் கொண்ட ஒரு மீடியா டெக் ஹெலியோ பி 20 அக்டா கோர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் இந் சாதனம் ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு வருகிறது.

பேட்டரி
256ஜிபி வரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட 32ஜிபி உள்ளடக்கிய சேமிப்புத்திறன் வழங்குகிறது. மற்றும் இந்த சாதனம் டெக் பம்ப் எக்ஸ்பிரஸ் 2.0 பாஸ்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்ட ஒரு 2300எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கிறது.

சென்சார்
கேமரா துறையை பொறுத்தமட்டில் பின்புறம் ஒரு 1/2.3 அங்குல எக்ஸ்மோர் ஆர்எஸ் (Exmor RS) சென்சார் மற்றும் ஒரு எப் / 2.0 துளை லென்ஸ் கொண்ட ஒரு 23எம்பி சோனி எக்ஸ்மோர் ஆர் சென்சார் உள்ளது. மற்றும் நிறுவனத்தின் ஹைபிரிட் ஆட்டோபோகஸ் தொழில்நுட்பம் கொண்டும் வருகிறது. முன்பக்கம் ஒரு 23மிமீ வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட, ஒரு 8எம்பி கேமரா கொண்டுள்ளது.

எக்ஸ்பீரியா எக்ஸ்இசட்எஸ்
சோனி எக்ஸ்பீரியா ஏக்ஏ1 சமீபத்தில் நிகழந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கருவியுடன் ரூ.49,990/- மதிப்புள்ள எக்ஸ்பீரியா எக்ஸ்இசட்எஸ் கருவியும் வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்பீரியா எக்ஸ்இசட்எஸ் அம்சங்கள்
- 5.2 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே
- 4ஜிபி ரேம்
- க்வால்காம் ஸ்னாப் 835 செயலி
- 64ஜிபு உள்ளடங்கிய சேமிப்பு,
- 2900எம்ஏஎச் பேட்டரி
- ஐபி 68 சான்றிதழ்
- 19எம்பி பின்புற கேமரா

மேலும் படிக்க
2017-ஆம் ஆண்டில் இதுவரை வெளியான 8 சூப்பர் ஸ்மார்ட்போன்கள்.!


Click it and Unblock the Notifications