இந்தியாவில் 6 இன்ச் டிஸ்பிளே; 4ஜிபி ரேம் உடன் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா.!

சோனி எல்ஐவி பயன்பாட்டின் மூன்று மாத இலவச சந்தாவும், எக்ஸ்ஏ1 அல்ட்ரா ஸ்டைல் ​​கவர் ஸ்டேண்ட் (எஸ்.சி.எஸ்.ஜி.40) வாங்குவதற்க்கான ரூ.1,000/- தள்ளுப்படி கூப்பனும் கிடைக்கும்.

|

சோனி நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ.29,990/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ள இந்த சாதனம் சோனி சென்டர் மற்றும் இந்தியா முழுவதுமுல்லா பெரிய மின்னணு கடைகளில் கிடைக்கின்றது.

பிளாக், வெள்ளை மற்றும் தங்கம் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் தன்னுள் சில சுவாரஸ்யமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் உடன் ரூ.1,490/- மதிப்புள்ள பாஸ்ட் சார்ஜரை பயனர்கள் சில்லறை பெட்டியுடன் தொகுக்கப்பட்டு பெறுவார்கள். மேலும் சோனி எல்ஐவி பயன்பாட்டின் மூன்று மாத இலவச சந்தாவும், எக்ஸ்ஏ 1 அல்ட்ரா ஸ்டைல் ​​கவர் ஸ்டேண்ட் (எஸ்.சி.எஸ்.ஜி.40) வாங்குவதற்க்கான ரூ.1,000/- தள்ளுப்படி கூப்பனும் கிடைக்கும்.

எட்ஜ்-டூ-எட்ஜ் எச்டி டிஸ்பிளே

எட்ஜ்-டூ-எட்ஜ் எச்டி டிஸ்பிளே

இந்த கருவியின் சில முக்கிய குறிப்புகள் பற்றி பேசுகையில், இது 1920 x 1080 பிக்சல்கள் என்ற ஒரு திரை தீர்மானம் கொண்ட எட்ஜ்-டூ-எட்ஜ் எச்டி டிஸ்பிளே கொண்டு வருகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள் சேமிப்பு ஆகியவற்றுடன், ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கப்படக்கூடிய ஆதரவும் கொண்டுள்ளது. ஒரு ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி20 ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

ஆட்டோஃபோகஸ்

ஆட்டோஃபோகஸ்

எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் கேமராவை பொறுத்தமட்டில் எக்ஸ்மோர் ஆர்எஸ் மொபைல் சென்சார், ஹைப்ரிட் ஆட்டோஃபோகஸ், 24 மிமீ அகல கோணம் எப்F2.0 லென்ஸ் மற்றும் 5எக்ஸ் ஸூம் ஆகியவற்றைக் கொண்ட 23 மெகாபிக்சல் பின்புற கேமரா கொண்டுள்ளது.

ஸ்மார்ட் செல்பீ ஃப்ளாஷ்

ஸ்மார்ட் செல்பீ ஃப்ளாஷ்

முன்பக்கம், 23மிமீ பரந்த-கோண லென்ஸுடன் 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா மேலும் ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் (OIS) மற்றும் ஸ்மார்ட் செல்பீ ஃப்ளாஷ் ஆகியவற்றை ஆதரிக்கிறது, இது குறைந்த-ஒளி நிலைகளில் நல்ல ஒளிநிலையான செல்பீக்கள் எடுத்துக்கொள்ள உதவுகிறது.

பாஸ்ட் சார்ஜர், கியூசி-3.0

பாஸ்ட் சார்ஜர், கியூசி-3.0

இந்த ஸ்மார்ட்போன் பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு நௌவ்கட் கொண்டு இயங்கும். 2700எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இக்கருவி பாஸ்ட் சார்ஜர், கியூசி-3.0 உடனான யூசிஎச்-12 (UCH-12) உடன் வருகிறது, இது 45 நிமிடங்களில் 60 சதவிகிதம் சார்ஜை வசூலிக்க உதவும் என்று நிறுவனம் கூறுகிறது.

யூஎஸ்பி டைப்-சி போர்ட்

யூஎஸ்பி டைப்-சி போர்ட்

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், இக்கருவி 4ஜி, ப்ளூடூத் வி4.2, வைஃபை, என்எப்சி (NFC), ஜிபிஎஸ் + க்ளோநாஸ் (GLONASS), கூகுள் கெஸ்ட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை ஆதரிக்கிறது. அளவீட்டில் இந்த தொலைபேசி 165 x 79 x 8.1 மிமீ மற்றும் 188 கிராம் எடையுடையது.

Best Mobiles in India

English summary
Sony Xperia XA1 Ultra with 6-inch Full HD display, 4GB RAM launched in India for Rs 29,990. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X