23எம்பி கேமராவுடன் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 ப்ளஸ், இந்தியாவில் அறிமுகம்.!
சோனி நிறுவனத்தின் இந்த இடைப்பட்ட கைபேசியின் பிரதான சிறப்பம்சமே அதன் ஒளியியல் தான்.!
சோனி நிறுவனம், கடந்த மாதம் ஐஎப்ஏ 2017-இல் அறிமுகப்படுத்திய அதன் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனை இன்று (வியாழன்) இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,990/- என்று நிர்ணயம் செய்யப்பட்டு பிளாக், ப்ளூ, மற்றும் கோல்ட் வண்ண மாதிரிகளில் நிறுவனத்தின் ஆப்லைன் ஸ்டோர்களில் வெள்ளி (நாளை) முதல் கிடைக்கப்பெறும்.
சோனி நிறுவனத்தின் இந்த இடைப்பட்ட கைபேசியின் பிரதான சிறப்பம்சமே அதன் ஒளியியல் தான்.!

23 மெகாபிக்சல் பின்புற கேமரா
ஒரு 23 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் பரந்த கோணம் லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்சல் முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ள இக்கருவி நிறுவனத்தின் சொந்த கிளியர்ஆடியோ + சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டும் வருகிறது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்
இந்த சாதனத்தின் மற்ற விவரக்குறிப்புகளை பொறுத்தமட்டில், இரட்டை சிம் ஆதரவு கொண்ட சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1 பிளஸ் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் (பெட்டிக்கு வெளியே) கொண்டு இயங்கும்.

4 ஜிபி ரேம்
இது 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் 64 பிட் ஆக்டா-கோர் மீடியா டெக் ஹீலியோ பி20 எஸ்ஓசி உடனான 4 ஜிபி ரேம் கொண்டு மற்றும் கிராபிக்ஸை பொறுத்தமட்டில் மாலி டி -880 எம்பி 2 ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா
ஒளியியல் அடிப்படையில்,ஆட்டோ ஃபோகஸ், 24 மிமீ அகல கோணம் எப் / 2.0 துளை லென்ஸ் கொண்ட ஒரு 23 மெகாபிக்சல் எக்ஸிமோர் ஆர்எஸ் ரியர் சென்சார் கொண்டுள்ளது, மறுபக்கம் 23மிமீ எப்/ 2.0 துளை லென்ஸ் கொண்ட 8எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது. இதன் கேமரா ஐஎஸ்ஓ 3200 என்ற அளவில் குறைந்த-ஒளி புகைப்படங்களை எடுக்கக்கூடிய திறன் கொண்டது.

3430எம்ஏஎச் பேட்டரி
மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 32 ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு கொண்ட இந்த ஸ்மார்ட்போன் க்விக் சார்ஜ் 2.0+ ஆதரவு கொண்ட 3430எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.

கைரேகை சென்சார்
அளவீட்டில் 155x75x8.7 மிமீ மற்றும் 190 கிராம் எடை கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த புதிய சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ1பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது சைட் மவுண்ட்டட் கைரேகை சென்சாருடன் வருகிறது.


Click it and Unblock the Notifications