புதிய சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடலின் சிறப்பு அம்சங்கள்

By Siva
|

கடந்த சில காலமாக ஸ்மார்ட்போன் பயனாளிகளின் டேஸ்ட் மாறி கொண்டே வருகிறது. அதிநவீன டெக்னாலஜி மற்றும் அகன்ற திரை ஆகிய அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போனையே அதிகம் விரும்புகின்றனர்.

புதிய சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடலின் சிறப்பு அம்சங்கள்

ஸ்மார்ட்போன் பயனாளிகளின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களும் அதிகளவில் அகன்ற திரை ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வருகின்றன.

இவற்றுள் ஒன்று சோனி நிறுவனம். விரைவில் வெளியாகவுள்ள சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடல் போனின் படங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. இந்த படங்களில் இருந்து இந்த போனின் டிஸ்ப்ளே அளவு தெரிய வந்துள்ளது.

இந்த படத்தில் இருந்து இந்த போனின் டிஸ்ப்ளே எல்ஜி G6 மற்றும் கேலக்ஸி எஸ்8 மாடல் போன்களை விட அகன்ற திரை கொண்டது என்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடல் வெளிவந்தவுடன் விற்பனையில் புரட்சி ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆச்சரியம் அளிக்கும் அகன்ற திரை:

ஆச்சரியம் அளிக்கும் அகன்ற திரை:

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடல் போனின் லீக் ஆன படத்தில் இருந்து தெரிய வந்துள்ளது என்னவெனில் இந்த போனின் டிஸ்ப்ளே 6.45 இன்ச் அளவில் இருக்கும் என்பதுதான்.

மேலும் இதன் திரைவிகிதம் 21:9 என்று இருக்கும் என்றும் இந்த விகிதம் 18:9 என்று இருக்கும் எல்ஜி G6 மற்றும் சாம்சங் கேலக்ஸ் எஸ்8 மாடல்களின் விகிதங்களை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சில லீக்ஸ் விபரங்கள்:

மேலும் சில லீக்ஸ் விபரங்கள்:

மேலும் சில லீக் ஆன விபரங்கள் மற்றும் வதந்திகளை வைத்து பார்க்கும்போது இந்த போன் பெஸல் லெஸ் டிஸ்ப்ளே மாடல் கொண்டது என்றும், வழக்கமான வால்யூம் பட்டன்களுடன் கேமிராவை மூடும் ஷட்டர் அமைப்பும் கொண்டது என்பதும் தெரிய வருகிறது.

மேலும் இந்த போனில் டூயல் ஸ்பீக்கர்கள் இருப்பதாகவும், சிகப்பு மற்றும் கிரே கலர்களில் இந்த போன் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

என்னென்ன சிறப்பு அம்சங்கள்?

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடலின் மற்ற சிறப்பு அம்சங்களை பார்க்கும்போது, இந்த போன் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 660 SoC வகையுடன் 4GB ரேம் மற்றும் 64GB இண்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது. மேலும் இந்த போனிl X10 LTE, வேகமாக சார்ஜ் ஏற்ற உதவும் 3050mAh பேட்டரி கெப்பசிட்டியும் உள்ளது.

ஜியோ, ஏர்டெல் உட்பட அனைத்திற்கும் ஆப் மூலம் ஆப்பு வைத்த ட்ராய்.!ஜியோ, ஏர்டெல் உட்பட அனைத்திற்கும் ஆப் மூலம் ஆப்பு வைத்த ட்ராய்.!

மற்ற தகவல்கள்:

மற்ற தகவல்கள்:

மற்ற சோனியின் எக்ஸ்பீரியா மாடல்களை போலவே இந்த சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் அல்ட்ரா மாடலும் மிக அருமையான கேமிராவை கொண்டது. இதில் 19MP பின்கேமிரா மற்றும் 13MP செல்பி கேமிராவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் 7.0 நெளகட் ஓஎஸ், ஆகியவற்றுடன் IP68 சான்றிதழ் கொண்ட போன் ஆகும். மேலும் இந்த போன் வாட்டர் மற்றும் டஸ்D ரெசிஸ்டெண்ட் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
A new leak which surfaced online speaks about the display size of Xperia X Ultra smartphone. According to this leak, it will boast a wide display with an aspect ratio larger than the much-hyped phones, LG G6 and Galaxy S8.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X