Home
Mobile

இரட்டை சிம் கார்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பு ஒப்பீடு!

By Super

இரட்டை சிம் கார்டு ஸ்மார்ட்போன்களின் சிறப்பு ஒப்பீடு!
டியூவல் சிம் வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்று நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் அருமையான ஒப்பீடு இந்த பக்கத்தில் காத்திருக்கிறது.

எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் மற்றும் சாம்சங் கேலக்ஸி ஒய் டியோஸ் என்ற இந்த 2 ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடையும் சிறப்பாகவும் தெளிவாகவும் பார்க்கலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, நிறைய சிறந்த தொழில் நுட்பங்களை வழங்கும்.

கேலக்ஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போன் 109 கிராம் எடை கொண்டதாக இருக்கும். கேலக்ஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போனை ஒப்பிட்டு பார்க்கையில், எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் ஸ்மார்ட்போனைவிட இலகு எடை கொண்டதாக இருக்கும். இதன் எடை 99.4 கிராமாக இருக்கும் என்பதால், கச்சிதமாக கையில் வைத்திருக்கலாம்.

பிரம்மாண்டமான திரையை கொடுக்கும் கேலக்ஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போன் 3.14 இஞ்ச் திரை வசதியை வழங்கும். கேலக்ஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போனின் திரை 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கிறது. இதன் 3.14 இஞ்ச் திரை அளவிற்கு, இந்த துல்லியம் குறைவாக தெரிகிறது.

3.2 இஞ்ச் திரை வசதியை கொண்ட எக்ஸ்பீரியா டிப்போ டியோஸ் ஸ்மார்ட்போன் திரை துல்லியம் 320 X 480 பிக்ஸலாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது கேலக்ஸி ஸ்மார்ட்போனின் திரையைவிட குறைந்த திரை வசதியினை கொண்டதாக எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் இருப்பினும், கொஞ்சம் அதிக திரை துல்லியத்தை கொடுப்பதாக தெரிகிறது.

எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், சாம்சங் கேலக்ஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தினையும் வழங்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்பன்களும் 3.15 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போன்களில், முகப்பு கேமரா கொடுக்கப்படவில்லை.

கேலக்ஸி ஒய் டியோஸ் 160 எம்பி இன்டர்னல் மெமரி வசதியினையும், எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் ஸ்மார்ட்போனில் 2 ஜிபி மெமரி வசதியினையும் எளிதாக பெறலாம். மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்கள் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்வதாக இருக்கும்.

எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் ஸ்மார்ட்போன் 1,500 எம்ஏஎச் பேட்டரியினையும், கேலக்ஸி ஒய் டியோஸ் 1,300 எம்ஏஎச் லித்தியம் பேட்டரியையும் கொடுக்கும். இதனால் எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் ஸ்மார்ட்பனில் 6 மணி நேரம் டாக் டைம், 360 மணி நேரம் ஸ்டான்-பை டைமை எளிதாக பெறலாம். கேலக்ஸி ஒய் டியோஸ் ஸ்மார்ட்போனில் 9 மணி நேரம் டாக் டைம் மற்றும் 360 மணி நேரம் ஸ்டான்-பை டைமை எளிதாக பெறலாம்.

எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் ஸ்மார்ட்போனை ரூ. 10,299 விலையில் ஃபிலிப்கார்ட் வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்டரில் பெறலாம். சாம்சங் கேலக்ஸி ஒய் ஸ்மார்ட்போனில் ரூ. 8,490 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X