முப்பெரும் சோனி ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டு அலசல்!

By Super
|

முப்பெரும் சோனி ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டு அலசல்!
மூன்று புதிய எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்களை, சர்வதேச ஐஎஃப்ஏ கண்காட்சியில் அறிமுகம் செய்து வைத்துள்ளது சோனி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன்கள் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும். இதனால் சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா ஜே, வி மற்றும் டி ஆகிய முப்பெரும் ஸ்மார்ட்போன்களின் ஒப்பீ்ட்டினை பார்க்கலாம். இதில் எக்ஸ்பீரியா டி ஸ்மார்ட்போனிற்கு டிஎக்ஸ் என்ற பெயரும் இருக்கிறது.

ஸ்மார்ட்போன்களின் திரை:

இங்கு கூறப்பட்டுள்ள 3 ஸ்மார்ட்போன்களின் திரைகளும் வெவ்வேறு அளவினை கொண்டதாக இருக்கிறது. எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் 4.0 இஞ்ச் திரையினையும், எக்ஸ்பீரியா வி 4.3 இஞ்ச் திரையினையும் கொண்டிருக்கிறது. இதில் மேல் கூறப்பட்டுள்ள 2 ஸ்மார்ட்போன்களின் திரையை விடவும், எக்ஸ்பீரியா டி ஸ்மார்ட்போனின் திரை சற்று பெரியதாக இருக்கும். எக்ஸ்பீரியா டி ஸ்மார்ட்போன் 4.6 இஞ்ச் திரை வசதியினை வழங்கும்.

திரை துல்லியம்:

திரையின் அளவு எதுவாக இருப்பினும், அதன் திரை துல்லியம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எக்ஸ்பீரியா டி மற்றும் வி ஸ்மார்ட்போன்களின் திரை வேறுபட்டிருந்தாலும், திரை துல்லியம் ஒரே அளவாக இருக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இந்த 2 ஸ்மார்ட்போன்களும் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.

எக்ஸ்பீரியா டி ஸ்மார்ட்போன் சிறப்பான மல்டி டச் திரை வசதியினை வழங்குவதோடு, ஸ்கிரேச் மற்றும் ஷட்டர் ப்ரூஃப் ஆகிய திரை கவசங்களையும் கொண்டதாக இருக்கும். எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் 854 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். இதில் திரைக்கு கீறள்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் கொரில்லா கிளாஸ் ப்ரொடெக்ஷன் இருக்கும்.

இயங்குதளம்:

ஒரு பெரிய ஒற்றுமை இந்த 3 ஸ்மார்ட்போன்களிலும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு 4.0.4 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டதாக இருக்கும். இதில் எக்ஸ்பீரியா வி ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனையும் கொடுக்கும். எக்ஸ்பீரியா வி ஸ்மார்ட்போன் குவால்காம் எம்எஸ்எம்8960 சிப்செட் மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரையும் வழங்கும்.

எக்ஸ்பீரியா டி ஸ்மார்ட்போன் குவால்காம் எம்எஸ்எம்8260ஏ ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட டியூவல் கோர் பிராசஸரினை கொடுக்கும். எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ-5 பிராசஸருடன், குவால்காம் எம்எஸ்எம்7227ஏ ஸ்னாப்டிராகன் சிப்செட் வசதியினை கொண்டதாக இருக்கும்.

கேமரா:

கேமரா வசதி என்பது மிக முக்கியமான வசதியாக அனைவராலும் கருதப்படுகிறது. எக்ஸ்பீரியா டி மற்றும் எக்ஸ்பீரியா ஜே ஆகிய இந்த ஸ்மார்ட்போன்கள் 13 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருக்கும். இந்த 2 ஸ்மார்ட்போன்களும் 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினை வழங்கும்.

எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் விஜிஏ முகப்பு கேமராவினையும் கொடுக்கும். எக்ஸ்பீரியா டி 16ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும், 1ஜிபி ரேம் வசதியினை கொடுக்கும். ஆனால் எக்ஸ்பீரியா வி ஸ்மார்ட்போனில் 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை பெறலாம். எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போனில் 4ஜிபி இன்டர்னல் மெமரி வசதி கொண்டது. ஆனால் இந்த 3 ஸ்மார்ட்போன்களின் மைக்ரோஎஸ்டி ஸ்லாட்களும் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ள உதவும்.

பேட்டரி:

எக்ஸ்பீரியா டி ஸ்மார்ட்போன் 1,850 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியின் மூலம் 7 மணி நேரம் டாக் டைமிற்கும், 410 மணி நேரம் ஸ்டான்பை டைமிற்கும் துணை புரியும். எக்ஸ்பீரியா வி ஸ்மார்ட்போன்கள் 1,750 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினை மூலம் 400 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 7 மணி நேரம் டாக் டைமினையும் கொடுக்கும். எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போனிலும் அதே 1,750 எம்ஏஎச் பேட்டரி தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் 618 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 7 மணி நேரம் டாக் டைமினையும் பெறலாம்.

இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போன்களில் சிறப்பான தொழில் நுட்ப வசதியினை மட்டும் பார்க்க முடியும். ஆனால் இதன் விலை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருக்க வேண்டியிருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X