Home
Mobile

சிறப்பான ஒலித்திறன் கொண்ட சோனி எக்ஸ்பீரியா டி!

சிறப்பான ஒலித்திறன் கொண்ட சோனி எக்ஸ்பீரியா டி!

இந்த ஆண்டில் நடந்து முடிந்த ஐஎப்ஏ 2012 கண்காட்சியில் புதிதாக எக்ஸ்பீரியா டி என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் பற்றி சிறு தொழில் நுட்ப விவரங்களின் தொகுப்பினை பற்றி பார்க்கலாம். அது மட்டும் அல்லாமல் இந்த எக்ஸ்பீரியா டி ஸ்மார்ட்போனில் உயர்ந்த தொழில் நுட்பத்துடன் வாய்ஸ்

சப்போர்ட் வசதி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த எக்ஸ்பீரியா டி ஸ்மார்ட்போன் 4.6 இஞ்ச் திரை வசதியினை வழங்குவதாக இருக்கும். இதனால் எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போனானா இதன் திரை மிக அகன்ற திரை வசதி கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.

ஐசிஎஸ் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸர் வசதி கொண்டதாக இருக்கும். இதில் 1 ஜிபி ரேம் வசதியும் மற்றும் அட்ரினா 225 ஜிபியூ தொழில் நுட்பத்தினையும் பெறலாம்.

தரத்தில் சிறந்த வசிதளை கொடுத்து அசத்தும் இந்த எக்ஸ்பீரியா டி ஸ்மார்ட்போன் என்எப்சி தொழில் நுட்ப வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதன் கேமராவும் ஆச்சர்யப்பட வைக்கும் பிக்ஸலை வழங்குவதாக இருக்கும். இதன் மூலம் 4128 X 3096 பிக்ஸல் கேமரா துல்லியத்தினை கொடுக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினை கொடுப்பதாக இருக்கும். லித்தியம் அயான் 1850 எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரியின் மூலம் இதில் சிறப்பாக நீடித்து உழைக்கும் பேட்டரி வசதியினை பெறலாம். இந்த எக்ஸ்பீரியா டி ஸ்மார்ட்போன் துல்லியமான ஒலியினை கொடுக்கும் என்பதற்கான (எச்டி வாய்ஸ் சர்டிஃபைடு) சான்றிதழையும் பெற்றுள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X