Home
Mobile

எக்ஸ்பீரியா வரிசையில் புதிய படைப்பை கொடுக்கும் சோனி!

By Super
எக்ஸ்பீரியா வரிசையில் புதிய படைப்பை கொடுக்கும் சோனி!

உயர்ந்த தொழில் நுட்பங்களை வெளியிடும் நிறுவனம் என்றாலே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை கேட்கவே வேண்டாம். சோனி நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்களுக்கு நல்ல மதிப்பு இருக்கிறது. எக்ஸ்பீரியா எஸ்டி-21-ஐ ன்ற புதிய ஸ்மார்ட்போனை சோனி நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம்! சோனி எஸ்டி-21-ஐ என்ற இந்த ஸ்மார்ட்போன் குறைந்த விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது பற்றி அதிகார பூர்வமான அறிவிப்பு ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

இந்த ஸ்மார்ட்போன் பற்றி வெளியாகி உள்ள தொழில் நுட்ப தகவல்களை பற்றி பார்க்கலாம். சோனி எஸ்டி-21-ஐ ஸ்மார்ட்போன் 3.2 இஞ்ச் திரை வசதியை கொண்டதாக இருக்கும். எப்போதுமே வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனின் திரை அகன்றதாக இருக்குமா எனற கேள்வி எழும். அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் சிறப்பான திரையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் திரை மூலம் 480 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். ஆன்ட்ராய்டு 4.0.3 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 800 கியூவல்காம் மோனோ நியூக்லியர் பிராசஸர் மூலம் சிறப்பான செயல்பாட்டினையும் வழங்கும்.

3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், அழகான புகைப்படத்திற்கும், துல்லியமான வீடியோவிற்கும் எந்தவித குறைவும் இருக்காது என்று கூறலாம். ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான விலை கொண்டதாகவும் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X