இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சோனி ஸ்மார்ட்போன்!

By Super
|
இந்தியாவில் அறிமுகமாகும் புதிய சோனி ஸ்மார்ட்போன்!

அனைவராலும் மிக ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் எக்ஸ்பீரியா சோலா ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது சோனி நிறுவனம்.

ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1 ஜிகஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் எஸ்டிஇ யூ-8500 டியூவல் கோர் பிராசஸரையும் வழங்கும்.

3.7 இஞ்ச் திரையின் மூலம் தெளிவாக தகவல்களை பார்கக்லாம். எக்ஸ் லவுட் மற்றும் 3டி சவுன்டு போன்ற புதிய தொழில் நுட்பங்களையும் இந்த

ஸ்மார்ட்போனில் எளிதாக பயன்படுத்த முடியும்.

5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 8 ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினையும் பெறலாம். மார்ச் மாதம் தொழில் நுட்ப உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த எக்ஸ்பீரியா சோலா ஸ்மார்ட்போன், மே 18-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் சோனி நிறுவனம் அப்கிரேட் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கறுப்பு, வெள்ளை, சிகப்பு போன்ற நிறத்தில் வடிவமைப்பை கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 1,320 எமஏஎச் பேட்டரியினையும் வழங்கும். என்எஃப்சி, டிஎல்என்ஏ, ஜிபிஎஸ், எம்டிபி போன்ற தொழில் நுட்ப வசதிகளுக்கும் இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும்.

சோனி நிறுவனத்தின் படைப்பான எக்ஸ்பீரியா சோலா ஸ்மார்ட்போன் ரூ.19,999 விலை கொண்டதாக இருக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சில வலைத்தளங்களில் ரூ.22,999 விலை கொண்டதாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் எக்ஸ்பீரியா சோலா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமான பிறகு தான் இதன் சரியான விலை வெளியாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X