எதிர் பார்ப்பினை எகிற வைக்கும் புதிய சோனி ஸ்மார்ட்போன்!

வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான பெயரை பெற்று இருக்கும் சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா வரிசையில் சோலா என்ற புதிய ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. சூப்பர் எல்க்ட்ரானிக் சாதனங்களை வெளியிடும் நிறுவனங்களில் சோனி நிறுவனமும் ஒன்று என்று கூறலாம். இதன் ஆன்ட்ராய்டு வெர்ஷன் 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம், எஸ்டி-எரிக்சன் நோவா தோர் யூ8500 சிப்செட் கொண்டது.
இதனால் சிறப்பான தொழில் நுட்பங்கள் அதி வேகத்தில் இயங்கும். இந்த ஸ்மார்ட்போனின் திரையில் தெரியும் எதையும் தெளிவாக பார்க்க 3.7 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த திரை 480 X 854 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும். 107 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் டியூல் கோர் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரும் உள்ளது.
2ஜி மற்றும் 3ஜி வசதிக்கு இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்வதால் இதன், பேட்டரியும் அதற்கு தகுந்த வகையில் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதன் ஸ்டான்டர்டு லித்தியம்-அயான் 1,320 எம்ஏஎச் பேட்டரி 2ஜி வசதிக்கு 6 மணி நேரம் டாக் டைம் மற்றும் 3ஜி வசதிக்கு 5 மணி நேரம் டாக் டைமையும் வழங்கும்.
அதே போல் 2ஜி வசதிக்கு 470 மணி நேரம் டாக் டைம் மற்றும் 3ஜி வசதிக்கு 475 மணி நேரம் டாக் டைமையும் இந்த பேட்டரியின் மூலம் பெற முடியும். இந்த சோனி எக்ஸ்பீரியா சோலா ஸ்மார்ட்போன் மார்ச் மாதத்திற்கு பிறகு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications