Home
Mobile

இந்தியாவில் களமிறங்கும் சோனியின் புதிய எக்ஸ்பீரியா போன்கள்

By Karthikeyan
இந்தியாவில் களமிறங்கும் சோனியின் புதிய எக்ஸ்பீரியா போன்கள்

பெர்லினில் நடைபெற்ற ஐஎப்எ 2012ல் நடைபெற்ற விழாவில் சோனி நிறுவனம் பல சூப்பரான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வைத்தது. தற்போது அந்த போன்களை இந்திய சந்தையில் சோனி அறிமுகம் செய்து வைக்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் முறையே எக்ஸ்பீரியா மிரோ, எக்ஸ்பீரியா ஜே மற்றும் எக்ஸ்பீரியா எஸ்எல் என்று அழைக்கப்படுகின்றன.

எக்ஸ்பீரியா எஸ்எல் ரூ.32,549க்கும், எக்ஸ்பீரியா மிரோ ரூ.15,249க்கும் மற்றும் எக்ஸ்பீரியா ஜே ரூ.18,399க்கும் விற்கப்பட இருக்கின்றன. இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் பல சூப்பரான தொழில் நுட்பங்களுடன் வருகின்றன.

எக்ஸ்பீரியா எஸ்எல் ஸ்மார்ட்போனை எடுத்துக் கொண்டால் இந்த போன் டூவல் கோர் 1.7 ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸருடன் வருகிறது. மேலும் சோனியின் வாக்மேன் அப்ளிகேசன், என்எப்சி ஆகியவற்றுடன் வருகிறது. அதோடு இந்த போனில் ஒரு சூப்பரான 12எம்பி கேமரா உண்டு. இந்த கேமராவில் எக்ஸ்மோர் ஆர் என்ற மொபைல் கேமரா சென்சாரும் உள்ளது. அதனால் இது சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கும்.

மேலும் இந்த போனில் இருக்கும் 4.3 ரியாலிட்டி டிஸ்ப்ளே மொபைல் ப்ரேவியா என்சினுடன் வருகிறது. அதனால் இந்த டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக இருக்கும். இந்த போன் கருப்பு, வெள்ளை மற்றும் க்ரே ஆகிய வண்ணங்களில் வந்து அசத்துகிறது. இந்த போன் ரூ.32,549க்கு விற்கப்படுகிறது.

அடுத்ததாக எக்பீரியா மிரோ ஸ்மார்ட்போன் 3.5 இன்ச் டிஸ்ப்ளேயுடன் களம் இறங்குகிறது. இதன் 5எம்பி கேமராவில் சூப்பரான வீடியோ பதிவை செய்ய முடியும். மேலும் இந்த போனில் சோனியின் எக்ஸ்லவுட் ஆடியோ தொழில் நுட்பம் உள்ளதால் இதில் சூப்பரான சவுண்ட் சிஸ்டமும் இருக்கும். இந்த போன் கருப்பு, பிங்க், வெள்ளை, மற்றும் வெள்ளி ஆகிய நிறங்களில் வருகிறது. இந்த போன் ரூ.15,249க்கு விற்பனையாகிறது.

இறுதியாக எக்ஸ்பீரியா ஜே ஸ்மார்ட்போன் மெல்லியதாக இருக்கிறது. 4.0 இன்ச் அளவில் ஒரு எப்டபுள்யுவிஜிஎ டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. 5எம்பி பின்பக்க கேமரா மற்றும் முகப்புக் கேமராவுடன் களமிறங்குகிறது. இந்த போன் கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களில் வருகிறது. இதன் விலை ரூ.18,399 ஆகும்.

மேலும் சோனி தனது போன்களுக்கு கணிசமான அளவில் விலைக் குறைப்பு செய்திருக்கிறது. அதன்படி தற்போது எக்ஸ்பீரியா ரூ.18,990க்கும், எக்ஸ்பீரியா ஐயன் ரூ.34,990க்கும், எக்ஸ்பீரியா பி ரூ.24,990க்கும் எக்ஸ்பீரியா யு ரூ.15,990க்கும் விற்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X