புதிய சோனி எக்ஸ்பீரியா எஸ் vs நோக்கியா லுமியா-900: ஓர் ஒப்பீடு

மொபைல் திருவிழாவான கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக் ஷோவில் நிறைய மொபைல்கள் பங்கு பெற்று இருந்தன. இதில் சோனி எக்ஸ்பீரியா எஸ், நோக்கியா லுமியா-900 என்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, இந்த இரண்டு ஸ்மார்ட்போனும் சிறந்த தொழில் நுட்ப பயன்பாடுகளை கொடுக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை தொழில் நுட்பம் கொண்டது. இது லெட் பிளாக்லிட் எல்சிடி மல்டி தொடுதிரை வசதியினையும், 720 X 1280 பிக்ஸல் துல்லியத்தையும் தரும். நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போனும் 4.3 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்டது தான், ஆனால் அமோல்டு திரை தொழில் நுட்ப வசதியினை கொண்டது. இது 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும்.
நோக்கியா லுமியா-900 8 மெகா பிக்ஸல் கேமரா வசதியினை பெற்றுள்ளது. இதனால் அழகான புகைப்படத்தையும், வீடியோ வசதியினையும் பெறலாம். சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் கேமரா வசதியில், லுமியாவை மிஞ்சுகிறது. எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் 12 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டது. இதனால் உயர்ந்த தொழில் நுட்பத்துடன் எந்த ஒரு புகைப்படத்தையும் தெளிவாக எடுக்க முடியும். இந்த இரண்டு ஸ்மார்ட்போனிலுமே 1.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும், 2ஜி மற்றும் 3ஜி வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. அதிலும் நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போன் 4ஜி தொழில் நுட்பத்தி்ற்கும் துணை புரிகிறது. சோனி எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போன் சிறந்த எல்ஐ-அயான் 1830எம்ஏஎச் பேட்டரியையும், நோக்கியா லுமியா-900 ஸ்மார்ட்போன் 1750 எம்ஏஎச் பேட்டரியையும் வழங்கும். இதனால் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைம் வசதியை இந்த 2 ஸ்மார்ட்போன்களிலுமே பெறலாம்.
கவர்ச்சிகரமான இந்த 2 ஸ்மார்ட்போன்களின் விலையும் நிச்சயம் கவரும் வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எக்ஸ்பீரியா எஸ் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications