Xperia சோனி Xperia நியாபம் இருக்குதா?- டக்கராக அறிமுகமான சோனி எக்ஸ்பீரியா ப்ரோ- விலை தெரியுமா?

|

சோனி தனது சமீபத்திய ஸ்மார்ட்போனாக எக்ஸ்பீரியா ப்ரோவை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. எத்தனை தான் புதுமாடல்கள் வந்தாலும் நோக்கியா, சோனி மாடல்களுக்கு என தனி வரவேற்பு இருக்கத் தான் செய்கிறது.

தொழில்முறை வீடியோகிராஃபர்களுக்காக சோனி எக்ஸ்பீரியா ப்ரோ

தொழில்முறை வீடியோகிராஃபர்களுக்காக சோனி எக்ஸ்பீரியா ப்ரோ

சோனி எக்ஸ்பீரியா 1 II மாடலின் சில அமைப்புகளை பின்பற்றி சோனி எக்ஸ்பீரியா ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2020 ஆம் ஆண்டில் தொழில்முறையிலான வீடியோ பதிவை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது அதேபோல் தொழில்முறை வீடியோகிராஃபர்களுக்காக சோனி எக்ஸ்பீரியா ப்ரோ வெளியிடப்பட்டுள்ளது.

5ஜி ஆதரவுடன் சோனி எக்ஸ்பீரியா ப்ரோ

5ஜி ஆதரவுடன் சோனி எக்ஸ்பீரியா ப்ரோ

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ மாடல் 5ஜி ஆதரவுடன் வரும் ஆண்ட்ராய்டு சாதனமாகும். இந்த ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய அம்சம் எச்டிஎம்ஐ வெளியீடாகும். இந்த எச்டிஎம்ஐ வெளியீட்டின் மூலமாக ஸ்மார்ட்போனின் கண்ணாடியில்லாத கேமராக்களின் வழியாக அதை வெளிப்புற கேமரா மானிட்டராகவும் பயன்படுத்தலாம்.

ப்ரீமியம் சோனி கேமராக்களுக்கு ஒத்ததாகும்

ப்ரீமியம் சோனி கேமராக்களுக்கு ஒத்ததாகும்

5ஜி இணைப்பு ஆதரவு, எக்ஸ்பீரியா ப்ரோ ஸ்மார்ட்போனின் கண்ணாடியில்லாத கேமராவின் மூலம் உள்ளடக்கத்தை நேரடியாக ஸ்ட்ரீம் செய்ய முடியும். சோனி எக்ஸ்பீரியா ப்ரோ பிளாஸ்டிக் பாலிகார்பனேட் உடலமைப்புடன் வருகிறது. இது ப்ரீமியம் சோனி கேமராக்களை போன்றதாகும். எக்ஸ்பெரிய 1 II சாதனத்துடன் ஒப்பிடும்போது சோனி எக்ஸ்பீரியா ப்ரோ அதன் பிளாஸ்டிக் உடலமைப்பில் கடினமாகவும் அழகாகவும் காட்சியளிக்கிறது.

பல்வேறு அம்சங்களோடு எக்ஸ்பீரியா ப்ரோ

எக்ஸ்பெரிய 1 II ஸ்மார்ட்போனில் இருக்கும் பல்வேறு அம்சங்கள் எக்ஸ்பீரியா ப்ரோவிலும் இருக்கிறது. எக்ஸ்பீரியா ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4கே (3840 x 1644) பிக்சல்கள் தீர்மானத்தை கொண்டுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓஎஸ் சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓஎஸ் சிப்செட்

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ ஸ்மார்ட்போனானது கடந்தாண்டு வெளியிடப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் மினி எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் வெளிப்புற கேமராவுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த சாதனத்தை சார்ஜ் செய்ய யூஎஸ்பி டைப்சி போர்ட் வசதி இருக்கிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி

எக்ஸ்பீரியா ப்ரோ ஸ்மார்ட்போன் 4000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. 5ஜி இணைய வேகத்தை இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனில் சிறந்த பதிவிறக்க மற்றும் பதிவேற்ற வேகத்தை அனுபவிக்கலாம்.

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ விலை

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ ஸ்மார்ட்போனானது எக்ஸ்பீரியா 1 II ஸ்மார்ட்போனின் விலையைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த சாதனத்தின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.1,82,500 ஆக இருக்கிறது. இந்த சாதனம் தொழில்முறை பயனர்களுக்கானது என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போதுவரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவில்லை.

Best Mobiles in India

English summary
Sony Xperia Pro Smartphone Launched With Micro HDMI Port, 4K OLED Display and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X