Home
Mobile

கேமராவையே தூக்கி சாப்பிடும் போல: சோனி எக்ஸ்பீரிய ப்ரோ-ஐ ஸ்மார்ட்போன் அறிமுகம்- அம்சங்கள் அள்ளுது!

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ-ஐ அறிமுகப்படுத்துகிறது. சோனியின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது 1-இன்ச் எக்ஸ்மோர் ஆர்எஸ் சிஎம்ஓஎஸ் சென்சார் மற்றும் ஃபேஸ் டிடக்ஷன் ஆட்டோஃபோகஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சாதனமானது மொபைல் போட்டோகிராபித் தன்மையை புதிய நிலைக்கு கொண்டு வரும் என கூறப்படுகிறது. சோனி எக்ஸ்பீரியா ப்ரோ சாதனத்தின் வலது பக்கத்தில் ஒரு சிறப்பு ஷட்டர் பட்டனை கொண்டுள்ளது. 12 ஜிபி ரேம் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி வசதியோடு இருக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ-ஐ: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ-ஐ: விலை மற்றும் கிடைக்கும் தன்மை

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ-ஐ விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், எக்ஸ்பீரியா ப்ரோ-ஐ ஸ்மார்ட்போன் ஆனது அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது. ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்க்கையில் இது 1799.99 டாலராக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.1.35 லட்சம் ஆக இருக்கிறது. சோனி ஃபோன் விலாக் மானிட்டர் கூடுதல் துணை பொருளாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை 199.99 டாலராக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.15000 ஆகும். சோனி எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மற்றும் விலாக் மானிட்டர் ஆனது டிசம்பர் மாதம் முதல் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனை கடைகளில் கிடைக்கிறது. எக்ஸ்பீரியா ப்ரோ-ஐ சாதனமானது சோல் ஃப்ராஸ்டட் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது.

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ-ஐ அம்சங்கள்

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ-ஐ அம்சங்கள் குறித்து பார்க்கையில், 6.5 இன்ச் 4கே எச்டிஆர் ஆதரவோடு (3,840x1,644 பிக்சல்கள்) தீர்மானத்தை கொண்டுள்ளது. சோனி டிஸ்ப்ளேவில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்துடன் வருகிறது. இது 100% DCI-P3 வண்ண வரம்பை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேயின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு அம்சத்தோடு வருகிறது. இந்த சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 12 ஜிபி ரேம் அம்சத்தோடு வருகிறது, அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

சோனி எக்ஸ்பீரியா ப்ரோ-ஐ ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பு உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 மெகாபிக்சல் 1-இன்ச் வகை Exmor RS சென்சார் உடன் வருகிறது. f/2.4 துளை லென்ஸ் உடன் 12 மெகாபிக்சல் 1 / 2.9-இன்ச் எக்ஸ்மோர் ஆர்எஸ் சென்சார் மற்றும் 12-மெகாபிக்சல் 1 / 2.5-இன்ச் ஆர்எஸ் சென்சார் உடன் வருகிறது. பின்புற கேமராக்களில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (ஓஐஎஸ்) உள்ளது. இந்த சோனி ஸ்மார்ட்போனில் செல்பி கேமரா வசதிக்கு என 8 மெகாபிக்சல் 1/4 சென்சார் மற்றும் எஃப் / 2.0 துளை லென்ஸ் உடன் வருகிறது.

4கே தெளிவுத்திறன் உடன் வீடியோ

4கே தெளிவுத்திறன் உடன் வீடியோ

புதிய ஃபிளாக்ஷப் ஸ்மார்ட்போன் 4கே தெளிவுத்திறன் உடன் வீடியோக்களை பதிவு செய்ய அனுமதிக்கிறது. சோனி 21:9 வீடியோ வடிவத்தில் வினாடிக்கு 120 பிரேம்கள் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு பல்வேறு வசதிகளோடு வருகிறது. இந்த கேமரா ஒளிப்பதிவு சார்பு பயன்முறையை கொண்டுள்ளது. அதேபோல் சோனி வ்லாக் மானிட்டர் ஆனது பின்புறத்தில் இணைக்கப்பட்ட இரண்டாம் நிலை காட்சியாகச் செயல்படும். ஸ்மார்ட்போன் 512 ஜிபி உள்சேமிப்பு வசதியை கொண்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு விரிவாக்கம் செய்வதன் மூலம் 1 டிபி வரை சேமிப்பகத்தை விரிவாக்கலம்.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

இந்த புதிய சோனி ஸ்மார்ட்போனானது உள்ளமைக்கப்பட்ட ஸ்பீக்கர்கள் உடன் டால்பி அட்மாஸ் ஆதரவை கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6 டூயல் பேண்ட் இணைப்போடு வருகிறது. ப்ளூடூத் வி5.2, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. 30 நிமிடங்களில் 50% வரை பேட்டரி சார்ஜ் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Sony Xperia Pro-I Smartphone Launched With 4K HDR OLED Display, 12GB RAM and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X