சோனி எக்ஸ்பீரியா போன்களுக்கான ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்கள்

Posted By: Staff

சோனி எக்ஸ்பீரியா போன்களுக்கான ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்கள்
சோனி மொபைல் நிறுவனம் தனது எக்ஸ்பீரியா வரிசை தயாரிப்புகளான எக்ஸ்பீரியா பி, யு, சோலா மற்றும் கோ ஆகியவற்றிற்கான ஆன்ட்ராய்டு 4.0.4 அப்டேட்களை தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த அப்டேட்களால் ஏற்கெனவே இருந்த சில பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதுடன் செயல்திறனையும் அதிகப்படுத்தியுள்ளது. அவற்றில் சில இங்கே தரப்பட்டுள்ளது. ஸ்டெபிலிட்டி, WiFi, போர்ட்டபிள் ஹாட்ஸ்பாட், கேமரா, NFC மற்றும் SMS.

 

எக்ஸ்பீரியா பி, ஐசிஎஸ் அப்டேடை வரும் ஆகஸ்ட் மாதம் முதலும், எக்ஸ்பீரியா யு மற்றும் சோலா வரும் செப்டம்பரில் அப்டேடைப் பெறுமென சோனி மொபைல் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

 

சோனி எக்ஸ்பீரியா பி பயனாளர்கள் OTA அல்லது PC கம்பானியன் என்ற அமைப்பின்மூலமோ இந்த அப்டேட்களைப் பெறமுடியும். அது நாடுகள் மற்றும் செல் போன் நிறுவன பயனாளர்களைப் பொருத்தது.

 

சோனி எக்ஸ்பீரியா யு, சோலா மற்றும் கோ ஆகியவற்றிற்கு ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் அப்டேடை OTA முறைமூலம் ஏற்க்கனவே அனுப்பபட்டுவிட்டது.

 

இந்த புதிய அப்டேட்டானது இன்னும் சில வாரங்களில் தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot