Home
Mobile

புதிய அப்டேஷனை பெறும் சோனி ஸ்மார்ட்போன்!

By Super
புதிய அப்டேஷனை பெறும் சோனி ஸ்மார்ட்போன்!

சமீபத்தில் புதிய எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதோடு, இதற்கு பிரத்தியேகமாக அப்டேஷன் வசதிகளையும் வழங்க உள்ளது.

எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதியினை வழங்க உள்ளது சோனி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் போது ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை கொண்டிருந்தது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போனில் இப்போது ஆன்ட்ராய்டு 4.0 இயங்குதளத்தினை அப்டேட் செய்ய உள்ளது சோனி. எப்போது இந்த அப்டேஷன் வழங்கப்படும் என்பதற்கு, இதன் தேதி பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது.

இந்த மாதம் 15ம் தேதியிலிருந்து 25 தேதிக்குள் எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழங்குப்படும்.

எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ்சிஎஸ் அப்டேஷன் வழங்குவதாக, சோனி நிறுவனம் தனது ஃபேஸ்புக் பக்கித்தில் தகவலை வெளியிட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் 4.0 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த திரையில் 540 X 960 பி்க்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம்.

உயர்ந்த தொழில் நுட்ப திரையினை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் விஜிஏ செகன்டரி கேமரா வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆன்ட்ராய்டு இயங்குதளம் சிறப்பான இயக்கத்தினை வழங்க இதில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

சில்வர், ப்ளேக் மற்றும் ரெட் என்று அற்புதமான நிறங்களில், அழகான வடிவமைப்பை வழங்கும் இந்த எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போன் நவீன தொழில் நுட்பத்திற்கு சிறப்பாக துணை புரியும்.

இதன் ஸ்டான்டர்டு எல்ஐ அயான் 1,305 எம்ஏஎச் பேட்டரி, இந்த ஸ்மார்ட்போனில் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சிறப்பாக ஒத்துழைக்கும் வகையில் நீடித்து உழைக்கும். சோனி எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போன் ரூ. 23, 145 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X