Home
Mobile

மே மாதம் இந்தியாவிற்கு வருகை தரும் சோனி ஸ்மார்ட்போன்!

By Super
மே மாதம் இந்தியாவிற்கு வருகை தரும் சோனி ஸ்மார்ட்போன்!

வாடிக்கையாளர்கள் பல நவீன தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை சோனி நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள். அதன் அடிப்படையில் எக்ஸ்பீரியா-பி என்ற புதிய ஸ்மார்ட்போனை இந்த மாதத்தின் நான்காவது வாரத்தில் சோனி நிறுவனம் வெளியிடும்.

எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்கள் எல்லோராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் தோற்றத்தை பார்த்தால் நிச்சயம் அனைவரும் இன்றே அதை பயன்படுத்தி பார்க்க வேண்டும் என்று தோன்றும்.

இந்த எக்ஸ்பீரியா-பி ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். கீறள்களில் இருந்து பாதுகாத்து கொள்ளும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் திரை உருவாக்கப்பட்டுள்ளது. டிஎப்டி திரை தொழில் நுட்பத்தினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4.0 பிரம்மாண்ட திரையில் காட்சியளிக்க உள்ளது. திரை துல்லியமாக

960 X 540 பிக்ஸலையும் வழங்கும்.

ஒரு ஸ்மார்ட்போனுக்கு இயங்குதளம் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு அதன் பிராசரும் மிக முக்கியமான ஒன்று. இந்த ஸ்மார்ட்போனில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் பிராசஸரையும் கொண்டது. லெட் ப்ளாஷ் வசதியுடன் கூடிய 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெற முடியும்.

புகைப்படமோ, வீடியோ ரெக்கார்டிங்கோ எதுவாக இருந்தாலும் துல்லியமாக இருக்க வேண்டும். எக்ஸ்பீரியா-பி ஸ்மார்ட்போனில் உள்ள 8 மெகா பிக்ஸல் கேமராவின் துல்லியம் நிச்சயம் சிறப்பான புகைப்படங்களை தான் வழங்கும் என்று கூறலாம்.

இதில் 16 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். அதோடு இந்த மாதம் எக்ஸ்பீரியா-பி ஸ்மார்ட்போன் வெளியாகும், அதே சமயத்தில் எக்ஸ்பீரியா சோலா ஸ்மார்ட்போனும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சோனி எக்ஸ்பீரியா-பி ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் ரூ.25,000 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X