வைட் மேஜிக் தொழில் நுட்பத்துடன் எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போன்!

|

வைட் மேஜிக் தொழில் நுட்பத்துடன் எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போன்!

வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெற்றிருக்கும் சோனி நிறுவனம் எக்ஸ்பீரியா பி என்ற ஸ்மார்ட்போனை சர்வதேச மொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும் 4 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பீரியா சிரீஸ் ஸ்மார்ட்போன்கள் சிறப்பான வெற்றியை வாடிக்கையாளர்கள் மத்தியில் தேடி தந்துள்ளது. இதே எக்ஸ்பீரியா வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை வழங்கி உள்ளது சோனி. டியூவல் கேமராவினை கொடுத்து அசத்தும் இந்த சோனி ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவும், விஜிஏ கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறப்பான புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போனில் 3264 X 2448 பிக்ஸல் கேமரா துல்லியம் எளிதாக கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்போன் புதிய வைட் மேஜிக் திரை தொழில் நுட்பத்தினை வழங்கும். எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஓஎஸ் வெர்ஷன் 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். சோனி எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போன் 2ஜி மற்றும் 3ஜி தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும். வாடிக்கையாளர்களின் பிரவுசிங் தேவையை பூர்த்தி செய்ய இதில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பமும் உள்ளது.

புதிய தொழில் நுட்ப வசதிகளை கொண்ட இந்த எக்ஸ்பீரியா பி ஸ்மார்ட்போனின் விலை இன்னும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இதன் விலை பட்டியல் விவரம் வெளியாகும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X