Home
Mobile

கேமராவை மறக்கச் செய்யும் சோனியின் புதிய எக்ஸ்பீரியா!

By Super
கேமராவை மறக்கச் செய்யும் சோனியின் புதிய எக்ஸ்பீரியா!

மின்னணு சாதனங்களை வித்தியாசமான முறையில் சோனி நிறுவனம் வழங்கி கொண்டிருப்பது, அனைவரும் அறிந்த ஒன்று. இப்படி மாறுபட்ட தொழில் நுட்பத்தை வழங்கி எண்ணில் அடங்கா சவுகரியத்தை கொடுக்கும் சோனி நிறுவனம் எக்பீரியா வரிசையில் புதிதாக ஒரு ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறது.

எக்ஸ்பீரியா இ-டிரீம்-6 என்ற பெயர் கொண்ட அந்த புதிய ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு 4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும். இதில் 4.6 இஞ்ச் அகன்ற திரை உள்ளது. இது போன்ற அகன்ற திரை நிச்சயம் மொபைல்களுக்கு ஒரு கம்பீர தோற்றத்தினை அளிக்கும் தான். ஆன்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளத்தினை இயக்க இதில் 1500 மெகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

இதன் அகன்ற திரையின் மூலம் 720 X 1280 பிக்ஸல் ரிசல்யூஷன் வழங்கப்படுகின்றது. மல்டி டச் திரை நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 3.5 எம்எம் ஆடியோ ஜேக் வசதிக்கு சப்போர்ட் செய்யும். ஜிஎஸ்எம் செலுலார் நெட்வொர்க் வசதிக்கு துணை புரியும் எக்ஸ்பீரியா இ-ட்ரீம்-6 ஸ்மார்ட்போன் ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில்

நுட்பத்தினையும் கொடுக்கும்.

இதனுடைய தொழில் நுட்பங்களை கேட்ட பின்பு இதன் முக்கிய அம்சம் கேமரா என்றும் சொல்ல தோன்றும். 13.2 மெகா பிக்ஸல் கேமரா இதில் இருக்கிறது என்று சொன்னாலே போதும், வாடிக்கையாளர்களுக்கு இதன் பெருமை நன்றாக புரிந்துவிடும். இதன் சிறந்த கேமரா புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் போன்றவைகளை எடுக்க உதவும்.

இந்த அருமையான ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மார்க்கெட்டில் பெறலாம். எக்ஸ்பீரியா இ-ட்ரீம்-6 ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பங்கள் வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X