சோனி எக்ஸ்பீரியா வரிசையில் ஓர் புதிய ஸ்மார்ட்போன்!

சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் வகையில் சோனி எக்ஸ்பீரியா நியோ எல் ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது சோனி நிறுவனம்.
ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 4.0 எல்சிடி தொடுதிரை வசதியினையும் வழங்கும். இதன் அகன்ற திரை 480 X 854 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
இந்த ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும், விஜிஏ முகப்பு கேமராவினையும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போனில் 2592 X 1944 பிக்ஸல் கேமரா துல்லியத்தின் மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.
ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளத்தினை கொண்டதால் இதில் கியூவல்காம் எம்எஸ்எம்8255 ஸ்னாப்டிராகன் பிராசஸரையும் கொண்டது.
இதில் 3ஜி தொழில் நுட்ப வசதியினை பயன்படுத்தலாம். எக்ஸ்பீரியா நியோ எல் ஸ்மார்ட்போனில் சிறந்த தொழில் நுட்ப வசதிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் ஸ்டான்டர்டு லித்தியம் பாலிமர் 1,500 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 2ஜி வசதிக்கு, 575 ஸ்டான்-பை டைமினையும் மற்றும் 7 மணி நேரம் 53 நிமிடம் டாக் டைமினையும் பெறலாம்.
3ஜி நெட்வொர்க் வசதிக்கு 410 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 7 மணி நேரம் 9 நிமிடம் டாக் டைமினையும் வழங்கும். 1 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போனில், 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடு்ததி கொள்ள முடியும். இன்னும் இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரம் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications