5.5-இன்ச் டிஸ்பிளேவுடன் சோனி எக்ஸ்பீரியா எல்2 அறிமுகம்.!
சோனி எக்ஸ்பீரியா எல்2 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சோனி நிறுவனம் தற்சமயம் சோனி எக்ஸ்பீரியா எல்2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் வைட்-ஆங்கில் கேமரா இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது, மேலும் கருப்பு மற்றும் தங்க நிற விருப்பங்களைக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சோனி எக்ஸ்பீரியா எல்2 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆன்லைன் ஸ்டோர் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சோனி எக்ஸ்பீரியா எல்2 :
சோனி எக்ஸ்பீரியா எல்2 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.5-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1280 x 720 பிக்சல் தீர்மானம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

மீடியாடெக்
சோனி எக்ஸ்பீரியா எல்2 ஸ்மார்ட்போனில் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி6737 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த சோனி எக்ஸ்பீரியா எல்2ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 256ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, மேலும் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.


இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
சோனி எக்ஸ்பீரியா எல்2 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.19,990-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications