அதிரடி அம்சங்களுடன் சோனி எக்ஸ்பீரியா எல்1 அறிமுகம்.!

Written By:

பிரபல சோனி நிறுவனம் மிக அமைதியாக அதன் எக்ஸ்பீரியா எல்1 என்ற ஒரு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. மொபைல் வேர்ல்டு மாநாட்டில், சோனி அதன் தலைமை கருவியான எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம், எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்எஸ் (XZs) மற்றும் மிட்ரேன்ஜ் அக்கருவியான எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ1 ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிவித்தது. இந்த எக்ஸ்பிரீயா எல் 1 கருவியின் மூலமாக சோனி அதன் 2017 வரிசையில் மேலுமொரு பட்ஜெட் ஸ்மார்ட்போனை சேர்த்துள்ளது.

அதிரடி அம்சங்களுடன் சோனி எக்ஸ்பீரியா எல்1 அறிமுகம்.!

சோனி எக்ஸ்பீரியா எல்1 கருவியானது ஒரு 5.5-அங்குல 720பி எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் மீடியாடெக் எம்டி737டி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. உடன் இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க சேமிப்புடன், விரிவாக்க ஆதரவும் வழங்குகிறது.

கிராபிக்ஸ் சார்பில் மாலி டி720 எம்பி2 ஜிபியூ மூலம் இயங்குகிறது உடன் எக்ஸ்பீரியா எல்1 கருவி ஒரு 13எம்பி பின்புற கேமரா மற்றும் எப்/2.2 துளை மற்றும் 24மிமீ வைட் ஆங்கிள் லென்ஸ் கொண்ட ஒரு 5எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. உடன் இந்த சோனி கருவியானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் ஒரு 2620எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஒரு இரட்டை சிம் ஸ்மார்ட்போன் ஆகும்.

உடன் 4ஜி, எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் 4.2, போர்ட் டைப்-சி ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் வழங்குகிறது. கருப்பு, வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ண விருப்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ள இது சோனியின் புதிய ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் பற்றி எந்த தகவலும் இல்லை.

மேலும் படிக்க : பிளாக்பெர்ரி ஆண்ட்ராய்டு ஆராரோ ஸ்மார்ட்போனால் கிலியாகியுள்ள மாடல்கள் எவை தெரியுமா?

English summary
Sony Xperia L1 budget Android smartphone launched. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot