ஸ்னேப்டீல் வலைத்தளத்தில் சோனி ஸ்மார்ட்போன்!

எக்ஸ்பீரியா அயான் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது சோனி நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனை ஸ்னேப்டீல் வலைத்தளத்தில் எளிதாக பெற முடியும். எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு மார்கெட்டில் வரவேற்பு கிடுகிடுவென்று அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்த எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் ப்ளேஸ்டேஷன் சான்றிதழ் பெற்றது. இதனால் நிறைய மோஷன் கேமிங் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். வாங்கும் ஸ்மார்ட்போன் சிறந்த கேமிங் வசதிக்கு சப்போர்ட் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் விளையாட்டு விரும்பிகளுக்கு இந்த எக்ஸ்பீரியா அயான் ஸ்மார்ட்போன் சிறந்த ஒன்றாக இருக்கும்.
இதில் 4.6 இஞ்ச் அகன்ற திரை கொடுக்கப்பட்டுள்ளது என்பதால், விளையாடுவதற்கு மிக வசதியாக இருக்கும். இதன் அகன்ற திரை டிஎப்டி திரை தொழில் நுட்பத்தினையும் கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் சிறப்பாக இயங்க, இதில் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் கியூவல்காம் பிராசஸரையும் கொண்டுள்ளது.
தகவல்களை ஸ்டோர் செய்ய அதிகபட்சமாக 16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மெமரி வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் 12.1 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது. இதன் மூலம் சிறப்பான புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை பெறலாம். எக்ஸ்பீரியா
அயான் என்எப்சி மற்றும் வைபை தொழில் நுட்ப வசதியினை சிறப்பாக பெற முடியும். 3டி (மோஷன் கேமிங்) வசதிக்கு சப்போர்ட் செய்ய இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி சிறப்பாக ஒத்துழைக்கும் என்று கூறலாம். ஏனெனில் இதில்1,900 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைம் வசதியினையும் வழங்கும். கறுப்பு மற்றும் சிகப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த எக்ஸ்பீரியா அயான் ஸ்மார்ட்போன் ஸ்னாப்டீல் வலைளத்தில் ரூ. 35,999 விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications