Just In
- 33 min ago
தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
- 1 hr ago
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- 1 hr ago
முடியை விட சிறிய மூளை சிப்.! பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கண்ட்ரோல் இனி மூளை மூலம்.!
- 1 hr ago
அடேங்கப்பா..செம்மையா இருக்கு: ஆன்லைனில் கசிந்த புதிய சாம்சங் 5G போனின் புகைப்படம்.!
Don't Miss
- Sports
ஐசிசி தரவரிசை பட்டியல்.. ஆல் டைம் சாதனை படைக்க சூர்யகுமாருக்கு வாய்ப்பு. இன்னும் 8 புள்ளிகளே தேவை
- News
மொத்தம் 11 மாவட்டங்கள்.. நிச்சயம் மழை பெய்யும்! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்! எங்கெல்லாம் தெரியுமா
- Movies
தளபதி 67ல் சமந்தாவா..? இணையத்தில் ட்ரெண்டாகும் போஸ்டர்: உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா?
- Lifestyle
உங்ககிட்ட இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க... இல்லன்னா உணவுக்குழாய் புற்றுநோய் வந்துடும்...
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அதிகார பூர்வமான விலை அறிவிப்புடன் சோனி ஸ்மார்ட்போன்!

ஸ்மார்ட்போன் உருவாக்கத்தில் புதிய எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் நன் மதிப்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் ஒரு புதிய எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போனின் விலை அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் எக்ஸ்பீரியா அயான் என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலையை இப்போது அதிகார பூர்வமாக அறிவித்திருக்கிறது சோனி நிறுவனம்.
நிறைய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாவதால், சோனி எக்ஸ்பீரியா அயான் ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரங்களை சட்டென்று ஞாபகத்திற்கு கொண்டு வருவது கடினம் தான்.
இதனால் இதன் தொழில் நுட்ப சிறப்புகள் பற்றி பார்க்கலாம். ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் குவல்காம் பிராசஸரை கொண்டதாக இருக்கும்.
இதில் 4.6 இஞ்ச் திரை வசதி கொடுக்கப்பட்டது. இதில் 4.6 இஞ்ச் அகன்ற திரை என்பது, காட்சிகளையும் மற்றும் தகவல்களையும் தெளிவாக காட்ட கூடிய ஒன்று தான். திரையின் அளவு மட்டும் அகன்றதாய் இல்லாமல், இதில் டிஎப்டி திரை தொழில் நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேமரா 12.1 மெகா பிக்ஸலை வழங்கும். இதன் முகப்பு கேமரா 1.3 மெகா பிக்ஸலை கொண்டுள்ளது 16ஜிபி மெமரி ஸ்டோரேஜ் வசதி கொண்ட இந்த சோனி எக்ஸ்பீரியா அயான் ஸ்மார்ட்போன், 32 ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதியினை வரை விரிவுபடு்த்தி கொள்ளலாம்.
பேட்டரி பற்றியும் குறைவாக சொல்லி விட முடியாது. இதன் 1,900 எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 12 மணி நேரம் டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமினை பெறலாம்.
எப்எம் ரேடியோ, ஆடியோ மற்றும் வீடியோ போன்ற பொழுதுபோக்கு அம்சத்திற்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன், 3டி கேமிங் வசதிக்காக ப்ளே ஸ்டேஷன் சான்றிதழ் பெற்றது. இந்த எக்ஸ்பீரியா அயான் ஸ்மார்ட்போனை ரூ. 36,999 விலையில் பெறலாம்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470