சோனி மற்றும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்: சிறந்த ஒப்பீட்டு அலசல்

By Super
|
சோனி மற்றும் எச்டிசி ஸ்மார்ட்போன்கள்: சிறந்த ஒப்பீட்டு அலசல்

மொபைல் தயாரிப்புகளில் அதிக வரவேற்பு பெற்று வரும் இரண்டு பெரிய நிறுவனங்களின் சிறந்த ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு பற்றி இங்கே பார்க்கலாம். எச்டிசி ஒன் வி மற்றும் சோனி எக்ஸ்பீரியா கோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சிறந்த தொழில் நுட்ப வசதிகளை கொண்டதாக இருக்கும்.

எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனின் திரை, எக்ஸ்பீகியா கோ ஸ்மார்ட்போனை ஒப்பிட்டு பார்க்கும் போது சற்று பெரியதாக இருக்கும். எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரை வசதி கொண்டதாகவும், எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் 3.7 இஞ்ச் திரை வசதி கொண்டதாகவும் இருக்கும்.

எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனின் திரை அளவு பெரியதாக இருப்பது மட்டும் அல்லாமல், இதன் திரை துல்லியமும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. இதில் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போன் 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொண்டதாக இருக்கும்.

சோனி எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும், எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் ஐஸ் கிரீ்ம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குவதாகவும் இருக்கும்.

எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனுக்கு புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் அப்டேஷன் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போனுக்கு ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அப்டேஷன் கொடுக்கப்படுமா? என்பது பற்றி எந்தவிதமான தகவல்களும் இன்னும் சரிவர வெளியாகவில்லை.

1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கார்டெக்ஸ் ஏ-9 பிராசஸர் எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போனிலும், அதே 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் எம்எஸ்எம்8255 ஸ்னாப்டிராகன் பிராசஸர் எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனிலும் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

லெட் ஃபிளாஷ், ஆட்டோஃபோக்கஸ், ஜியோ டேகிங், டச் ஃபோக்கஸ் போன்ற பல தொழில் நுட்ப வசதிகளை கொடுக்கும் 5 மெகா பிக்ஸல் கேமரா இந்த ஸ்மார்ட்போன்களில் கொடு்க்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் விஜிஏ முகப்பு கேமராவும் இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும். இதனால் வீடியோ சாட்டிங் எளிதாக செய்யலாம்.

எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போன் 8 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும், எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் 4 ஜிபி மெமரி வசதியினையும் கொண்டது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 512 எம்பி ரேம் வசதியினை கொண்டிருப்பது போல, இதன் மைக்ரோஎஸ்டி கார்டும் 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள சப்போர்ட் செய்கிறது.

ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சமே வைபை நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்வது தான் என்று இருக்கும் போது, இந்த ஸ்மார்ட்போன்களில் வைபை வசதி இருப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போன் 1,305 எம்ஏச் பேட்டரியின் மூலம் 5.5 மணி நேரம் டாக் டைம் வசதியினையும், 460 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் எளிதாக பெற முடியும். உயர்ந்த தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும் வகையில் 1,500 எம்ஏஎச் பேட்டரியை எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போனும் கொடுக்கும்.

சோனி எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போன் ரூ. 18,999 விலையிலும், எச்டிசி ஒன் வி ஸ்மார்ட்போன் ரூ. 18,599 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X