Home
Mobile

ஜப்பானின் மொபைல் மார்கெட்டை கலக்கும் சோனி ஸ்மார்ட்போன்!

By Super
ஜப்பானின் மொபைல் மார்கெட்டை கலக்கும் சோனி ஸ்மார்ட்போன்!

சிறந்த மின்னணு சாதனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சோனி நிறுவனம், தனது சூப்பர் படைப்பின் மூலம் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளது. எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போனான ஆர்கோ எச்டி ஸ்மார்ட்போனை ஜப்பானில் வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் அங்குள்ள வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொழில் நுட்பங்களை அதிகம் பயன்படுத்துவதிலும் சரி, உருவாக்குவதிலும் சரி, ஜப்பான் மிக பிரசித்தி பெற்ற இடம் என்று சொல்லலாம். அப்படிப்பட்ட இடத்தில் ஒரு ஸ்மார்ட்போன் அதிக வரவேற்பு பெற்றுள்ளது என்றால் நிச்சயம் அந்த ஸ்மார்ட்போன் பற்றிய தொழில் நுட்ப விவரங்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டியது தான்.

இந்த ஸ்மார்ட்போன் பல பேர் எதிர்பார்க்கும் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இதில் ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கூடிய விரைவிவ் அப்கிரேட் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்னும் அதிகமான தொழில் நுட்ப வசதிகளை பெற முடியும் என்று நிச்சயமாக

கூறலாம்.

அற்புதமான இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் அகன்ற திரை வசதியினையும் கொடுக்கும். இதன் மூலம் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தில் சர்வ சாதரணமாக வழங்கும். சக்குரா, பிளாக், வைட் மற்றும் அக்குவா என்று பல வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடுதிரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் கியூவல்காம் பிராசஸரை பெற்றுள்ளது. இதனால் சீரான, அதே சமயம் அதி வேகமாகவும் செயல்படும் திறன் கொண்டது.

கேமரா சிறப்பாதாக இருக்கக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களுக்கு ஏற்ற வகையில் 12 மெகா பிக்ஸல் மற்றும் 1.3 மெகா பிக்ஸல் கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெற முடியும்.

பிரவுசிங் வசதிக்கு ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பங்களும் இதில் பயன்படுத்த முடியும். 3ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்தினை இதில் பெற வேண்டும் என்றால், அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் சாத்தியமே. இதன் பேட்டரி சுமார் 1,840 எம்ஏஎச் ஆற்றலினை வழங்கும்.

சிறந்த தொழில் நுட்பங்களை எந்த வித தடையும் இன்றி, நீண்ட நேரம் பயன்படுத்த இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக துணை புரியும். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.30,000 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X