Home
Mobile

கேட்டாலே தலைச்சுற்றும் விலை.. 6.1-இன்ச் டிஸ்பிளே.. 8ஜிபி ரேம்.. அறிமுகமானது சோனி போன்.. எந்த மாடல்?

சோனி நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பிறகு சோனி எக்ஸ்பீரியா 5 v என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய
டிஸ்பிளே, அசத்தலான கேமரா என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 5 V (Sony Xperia 5 V) ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் இந்த போன் தற்போது அறிமுகம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது, இதன் விற்பனை விவரங்களை வெளியிடவில்லை அந்நிறுவனம். அதாவது இந்த
மாதம் இறுதியில் சோனி எக்ஸ்பீரியா 5 V விற்பனை துவங்கும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய சோனி ஸ்மார்ட்போனின் விலை மற்றும்
அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 6.1-இன்ச் டிஸ்பிளே.. 8ஜிபி ரேம்.. அறிமுகமானது சோனி போன்.. எந்த மாடல்?

சோனி எக்ஸ்பீரியா 5 V ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, எச்டிஆர் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பல்வேறு சிறப்பான அமசங்களை கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. அதேபோல் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning's Gorilla Glass Victus 2) பாதுகாப்பு இதில் உள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சோனி எக்ஸ்பீரியா 5 வி ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சக்திவாய்ந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் மற்றும் வேகம் வழங்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 13 (Android 13 OS) இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அசத்தலான போன். குறிப்பாக ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த சோனி எக்ஸ்பீரியா 5 V போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது எக்ஸ்பீரியா 5 V போனில் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவும் உள்ளது.

LDAC மற்றும் Hi-Res ஆடியோ ஆதரவு கொண்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த சோனி எக்ஸ்பீரியா 5 V போனின் முன்புறம் உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். மேலும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஐபி68 (IP68) சான்றிதழ் பெற்றுள்ளது சோனி எக்ஸ்பீரியா 5 V ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சோனி எக்ஸ்பீரியா 5 V ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமராவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

 6.1-இன்ச் டிஸ்பிளே.. 8ஜிபி ரேம்.. அறிமுகமானது சோனி போன்.. எந்த மாடல்?

இந்த போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது 30 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த சோனி எக்ஸ்பீரியா 5 V ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த போனை 30 நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சோனி நிறுவனம்.

கருப்பு, நீலம் மற்றும் பிளாட்டினம் சில்வர் நிறங்களில் சோனி எக்ஸ்பீரியா 5 V ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சோனி எக்ஸ்பீரியா 5 வி ஸ்மார்ட்போனின் விலை 999 யூரோக்கள் (இந்திய மதிப்பில்,ரூ.89,700). அனைத்து நாடுகளிலும் இந்த போனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Xperia 5V with 48MP camera launched:check specifications, price, sale Date : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X