ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியுடன் களமிறங்கும் சோனி எக்ஸ்பீரியா 2.!
இதற்கு முன்பு வந்த எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களை விட சற்று வித்தியசமான வடிவமைப்பில் இந்த எக்ஸ்பீரியா 2 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா 2 ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என அறிவப்பு வெளவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.

இதற்கு முன்பு வந்த எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களை விட சற்று வித்தியசமான வடிவமைப்பில் இந்த எக்ஸ்பீரியா 2 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சோனி நிறுவனம்.

டிஸ்பிளே:
சோனி எக்ஸ்பீரியா 2 ஸ்மார்ட்போன் மாடல் சினிமாவைடு டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு 2880 x 1234 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிப்செட்:
எக்ஸ்பீரியா 2 ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதியுடன் வெளிவரும், பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளதாக சோனி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு:
இந்த சோனி எக்ஸ்பீரியா 2 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் கூறியள்ளது.

கேமரா:
சோனி எக்ஸ்பீரியா 2 ஸ்மார்ட்போனில் மூன்று ரியர் கேமரா இடம்பெறும் என்றும், பின்பு 16எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்றும் அறிவிப்பு வெளிவந்துள்ளது.

பேட்டரி:
மேலும் இந்த ஸஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் குவிக் சார்ஜ் 4 ஆதரவு, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. பின்பு கருப்புஇ சிவப்புஇநீலம் போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications