Home
Mobile

அறிமுகமானது புது Sony 5ஜி போன்.. 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சோனி நிறுவனம் தனது புதிய சோனி எக்ஸ்பீரியா 10 VIII (Sony Xperia 10 VIII) ஸ்மார்ட்போனை இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த சோனி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இப்போது சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சோனி எக்ஸ்பீரியா 10 VIII அம்சங்கள் (Sony Xperia 10 VIII specifications): 6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே உடன் புதிய சோனி எக்ஸ்பீரியா 10 VIII ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2340 x 1080 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 10 பிட் டோனல் கிரேடேஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புது Sony 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 6என்எம் 5ஜி (Qualcomm Snapdragon 6 Gen 3 6nm 5G) சிப்செட் உடன் சோனி எக்ஸ்பீரியா 10 VIII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடலில் உள்ளது.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு சோனி எக்ஸ்பீரியா 10 VIII ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு வருடங்கள் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

50எம்பி Exmor RS மெயின் சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (side-mounted fingerprint sensor) கொண்டுள்ளது சோனி எக்ஸ்பீரியா 10 VIII ஸ்மார்ட்போன் மாடல்.IP65 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் வெளிவந்துள்ளது.

360 ரியாலிட்டி ஆடியோ அப்மிக்ஸ் (60 Reality Audio Upmix), DSEE அல்டிமேட், ஸ்டீரியோ ரெக்கார்டிங், குவால்காம் aptX அடாப்டிவ், முன்பக்க ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல ஆடியோ அம்சங்கள் இந்த சோனி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் ஆதரவுடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது.

அறிமுகமானது புது Sony 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி உடன் சோனி எக்ஸ்பீரியா 10 VIII ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ், என்எஃப்சி, யூஎஸ்பி டைப்-சி 2.0 உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

சோனி எக்ஸ்பீரியா 10 VIII ஸ்மார்ட்போனின் விலை 599 Euros (இந்திய மதிப்பில் ரூ.66,850)-ஆக உள்ளது. வரும் செப்டம்பர் மாதம் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் இந்த புதிய சோனி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Xperia 10 VIII With 5000mAh battery launched global: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X