சோனி களமிறக்கும் புதிய போன்.. ஸ்னாப்டிராகன் சிப்செட்.. 8ஜிபி ரேம்.. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்.. எந்த மாடல்?
சோனி நிறுவனம் தனது புதிய சோனி எக்ஸ்பீரியா 10 VIII (Sony Xperia 10 VIII) ஸ்மார்ட்போனை வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும். இந்நிலையில் இந்த புதிய சோனி ஸ்மார்ட்போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
சோனி எக்ஸ்பீரியா 10 VIII அம்சங்கள் (Sony Xperia 10 VIII Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 (Snapdragon 6 Gen 3) சிப்செட் உடன் புதிய சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி உடன் சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் அறிமுகமாகும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த புதிய சோனி ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் அறிமுகம் செய்யப்படும். அதுவும் 50எம்பி அல்லது 200எம்பி ரியர் கேமரா உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா இடம்பெற வாய்ப்பு உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)போன்ற அம்சங்கள் இந்த புதிய சோனி போனில் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதியுடன் இந்த புதிய சோனி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்.
6000எம்ஏஎச் பேட்டரி அல்லது 6500எம்ஏஎச் பேட்டரி உடன் சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

வைஃபை 6, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடலில் உள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், ஒயிட் மற்றும் ப்ளூ ஆகிய நிறங்களில் இந்த புதிய சோனி எக்ஸ்பீரியா 10 VIII மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த சோனி ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
photo credits notebookcheck, Sony


Click it and Unblock the Notifications