Home
Mobile

பின்றான்டா இவன்.. OLED டிஸ்பிளே.. ஹைபிரிட் OIS கேமரா.. 5000mAh பேட்டரி.. 30W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?

சோனி நிறுவனத்தின் சோனி எக்ஸ்பீரியா 10 VII (Sony Xperia 10 VII) ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 6என்எம் சிப்செட், ஓஎல்இடி டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஹைபிரிட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்டேபோனின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சோனி எக்ஸ்பீரியா 10 VII அம்சங்கள் (Sony Xperia 10 VII Specifications): இந்த சோனி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 6என்எம் (Qualcomm Snapdragon 6 Gen 3 6nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கிடைக்கிறது. 3 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் இதில் கிடைக்கிறது.

பின்றான்டா இவன்! OLED டிஸ்பிளே.. ஹைபிரிட் OIS கேமரா.. 5000mAh பேட்டரி!

இந்த சிப்செட்டுக்கு ஏற்ப அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. கூடுதல் ஸ்டோரேஜ் கொடுக்க 2 டிபி மெமரிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சிலாட் சப்போர்ட கொடுத்து இருக்கிறது. டிஸ்பிளே பட்டையை கிளப்புகிறது.

கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) பாதுகாப்பு கொண்ட 6.1 (2340 x 1080 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. சோனி டிஸ்பிளே எப்படி என்று சொல்லி தெரிய வேண்டியது கிடையாது.

அதேபோல கேமராவில் அடித்து கொள்ள முடியாதபடி டூயல் ரியர் சிஸ்டம் கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின் கேமரா மற்ற்ரும் 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவில் எக்ஸ்மோர் ஆர்எஸ் (Exmor RS) சென்சார் மற்றும் ஹைபிரிட் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது. ஆகவே, ஓஐஎஸ் (OIS) உள்ளது.

அதேபோல ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜியும் கிடைக்கிறது. இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போனில் 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 78 டிகிரி வைடு ஆங்கிள் சப்போர்ட் கிடைக்கிறது. இதில் 5000mAh பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. யுஎஸ்பி பிடி சப்போர்ட் கொடுக்கிறது. சோனி பேட்டரி பீச்சர்கள் கிடைக்கின்றன.

பின்றான்டா இவன்! OLED டிஸ்பிளே.. ஹைபிரிட் OIS கேமரா.. 5000mAh பேட்டரி!

ஆகவே, எக்ஸ்பீரியா அடாப்டிவ் சார்ஜிங் (Xperia Adaptive Charging), ஸ்டாமினா மோட் (STAMINA Mode) உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor) மற்றும் IP65 ரேட்டிங் & IP68 ரேட்டிங் கொண்ட ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

சோனி நிறுவனமானது, எப்போதும் ஆடியோவில் கவனம் செலுத்துகிறது. இதிலும், 360 ரியாலிட்டி ஆடியோ சர்டிபைடு மற்றும் 360 ரியாலிட்டி ஆடியோ அப்மிக்ஸ் சப்போர்ட் கொண்ட ப்ரன்ட் ஃபயரிக் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. குவால்காம் ஏபிடிஎக்ஸ் அடாப்டிவ் மற்றும் ஸ்டீரியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை 527 அமெரிக்கா டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.46,523) இருக்கிறது. ஒயிட், டர்க்கைஸ் மற்றும் சார்கோல் பிளாக் ஆகிய கலர்களில் கிடைக்கிறது. ஐரோப்பிய மார்கெட்டில் கிடைக்கிறது. விரைவில் குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. டிஸ்பிளே, கேமரா, ஆடியோவில் அடித்து கொள்ள முடியாது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X