கொஞ்சம் பொறுங்க.. 50எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. வருகிறது புதிய Sony ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
சோனி எக்ஸ்பீரியா 10 VII (Sony Xperia 10 VII) ஸ்மார்ட்போன் ஆனது உலக சந்தையில் வரும் மே 15-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இந்த போன் வரும் அக்டோபர் மாதம் தான் அறிமுகமாகும் என்று தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்டிகிள்ஸ் (Spektykles) என்ற டிப்ஸ்டர் தற்போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சோனி எக்ஸ்பீரியா 10 VII அம்சங்கள் (Sony Xperia10 VII Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Snapdragon 6 Gen 4 ) சிப்செட் உடன் சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் வழங்கும்.
6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 21:9 அஸ்பெக்ட் ரேசியோ (aspect ratio), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
OIS ஆதரவு கொண்ட 50எம்பி மெயின் லென்ஸ் + அல்ட்ரா-வைடு லென்ஸ் (ultra-wide lens) என்கிற ட்ரிபிள் டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த போனின் ரியர் கேமரா மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்(In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII போன் வெளிவரும். மேலும் 5000mAh பேட்டரி இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








