மாஸ் காட்டும் சோனி.. 50எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. வருகிறது புது 5ஜி போன்.. எந்த மாடல்?
சோனி நிறுவனம் தனது புதிய சோனி எக்ஸ்பீரியா 10 VII (Sony Xperia 10 VII) ஸ்மார்ட்போன் மாடலை வரும் அக்டோபர் மாதம் உலகம் சந்தையில் அறிமுகம் செய்யும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த சோனி போனின் படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது.
அதன்படி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போன். மேலும் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) வசதியும் இந்த போனில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சோனி நிறுவனம்.

சோனி எக்ஸ்பீரியா 10 VII அம்சங்கள் (Sony Xperia10 VII Specifications): 6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 21:9 அஸ்பெக்ட் ரேசியோ (aspect ratio), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் 4 (Snapdragon 6 Gen 4 ) சிப்செட் உடன் சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் வழங்கும்.
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி மெயின் லென்ஸ் + அல்ட்ரா-வைடு லென்ஸ் (ultra-wide lens) என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன. எனவே இந்த போனின் ரியர் கேமரா மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும்.
5000mAh பேட்டரி இந்த போனில் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 10 VII போன் வெளிவரும்.
5ஜி, என்எப்சி, வைஃபை, புளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளது. பின்பு சார்கோல் பிளாக், சிடார் ஒயிட் மற்றும் டர்க்கைஸ் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications