Home
Mobile

அறிமுகமானது புதிய சோனி 5ஜி போன்.. OLED டிஸ்பிளே.. IPX8 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?

சோனி நிறுவனம் தனது புதிய சோனி எக்ஸ்பீரியா 1 VIII ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த புதிய சோனி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இப்போது சோனி எக்ஸ்பீரியா 1 VIII போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சோனி எக்ஸ்பீரியா 1 VIII அம்சங்கள் (Sony Xperia 1 VIII specifications) 6.5-இன்ச் ஒஎல்இடி எல்டிபிஒ (OLED LTPO) டிஸ்பிளே வசதியுடன் சோனி எக்ஸ்பீரியா 1 VIII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன் (Corning Gorilla Glass Victus 2 Protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புதிய சோனி 5ஜி போன்.. OLED டிஸ்பிளே.. IPX8 ரேட்டிங்.. எந்த

48எம்பி பிைரிமரி கேமரா + 48எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 48எம்பி 70எம்எம் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது சோனி எக்ஸ்பீரியா 1 VIII ஸமார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. அதேபோல் டைனமிக் ரேஞ்சை மேம்படுத்தவும் இமேஜ் நாய்ஸ்-ஐ குறைக்கவும் அனைத்து பின்புற கேமராக்களிலும் RAW மல்டி-ஃபிரேம் பிராஸஸர்களை செயல்படுவதாக சோனி கூறுகிறது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் (Qualcomm's Snapdragon 8 Elite Gen 5 chipset) உடன் சோனி எக்ஸ்பீரியா 1 VIII அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்தலாம்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் சோனி எக்ஸ்பீரியா 1 VIII ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது 2டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

3.5எம்எம் ஆடியோ ஜாக், 360 ரியாலிட்டி ஆடியோ, 360 ரியாலிட்டி ஆடியோ ஹார்டுவேர் டிகோடிங், 360 ஸ்பேஷியல் சவுண்ட், ஃபுல்-ஸ்டேஜ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ், DSEE அல்டிமேட், ஸ்டீரியோ ரெக்கார்டிங், குவால்காம் aptX HD ஆடியோ போன்ற அனைத்து சிறப்பான வசதிகளுடன் இந்த சோனி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது.

சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளது. அதேபோல் IPX5/IPX8 ரேட்டிங் மற்றும் IP6X ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உடன் இந்த புதிய போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 200 கிராம் ஆகும்.

அறிமுகமானது புதிய சோனி 5ஜி போன்.. OLED டிஸ்பிளே.. IPX8 ரேட்டிங்.. எந்த

5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த போனில் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 6.0 எல்இ, ஜிபிஎஸ், குளோனாஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. நேட்டிவ் கோல்ட், கிராஃபைட் பிளாக் (Graphite Black), கார்னெட் ரெட் நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

சோனி எக்ஸ்பீரியா 1 VIII ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை €1499 (இந்திய மதிப்பில் ரூ.1,68,300) ஆக உள்ளது. விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளில் சோனியின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் விற்பனை செய்யப்படும். தற்போது இந்த போனின் முன்பதிவு தொடங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
Sony Xperia 1 VIII launched with OLED: Check Specifications, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X