வெச்சி செஞ்சிட்டாங்க.. OLED டிஸ்பிளே.. 12GB ரேம்.. OIS கேமரா.. 30W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஓஎல்இடி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், 2 டிபி மெமரி, ஓஐஎஸ் + ஈஐஎஸ் கேமரா, 30W சார்ஜிங், 5000mAh பேட்டரி, IPX8 ரேட்டிங் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல் எக்ஸ்பீரியா இன்டலிஜென்ட் பீச்சர்களுடன் அல்ட்ரா பிரீமியம் மாடலாக சோனி எக்ஸ்பீரியா 1 VII (Sony Xperia 1 VII) போன் வெளியாகி இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3எம்எம் சிப்செட் கொண்ட இந்த சோனி எக்ஸ்பீரியா போனின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சோனி எக்ஸ்பீரியா மாடல்களுக்கு உலகளவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீமியம் பில்ட் குவாலிட்டி மட்டுமல்லாமல், சாப்ட்வேர்-லெவல் பீச்சர்களிலும் பிரீமியமாக இந்த மாடல்கள் கிடைக்கும். இதனாலேயே விலை அதிகமாக இருந்தாலும், எதிர்பார்ப்பு குறையாமல் இருக்கிறது. இதில் எக்ஸ்பீரியா இன்டலிஜென்ட் பீச்சர்களுடன் இந்த புதிய மாடல் வெளியாகி இருக்கிறது.

சோனி எக்ஸ்பீரியா 1 VII அம்சங்கள் (Sony Xperia 1 VII Specifications): பிரீமியம் மெட்டல் மிடில் ஃபிரேம் மற்றும் கிளாசிக் பில் ஷேப் டிசைனில் மெட்டல் கேமரா பம்ப் கிடைக்கிறது. டேக்டைல் கிளாஸ் டெக்ச்சரில் பேனல் வருகிறது. இந்த டிசைனில் மோஸ் கிரீன் (Moss Green), ஆர்க்கிட் பர்பிள் (Orchid Purple) மற்றும் ஸ்லேட் பிளாக் (Slate Black) கலர்கள் வருகின்றன.
முன்பக்கம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 (Corning Gorilla Glass Victus 2) புரொடெக்சன் மற்றும் பின்பக்கம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் கொடுக்கிறது. இதுபோக IPX5 ரேட்டிங் மற்றும் IPX8 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், IP6X ரேட்டிங் டஸ்ட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆல்-ரவுண்ட் புரொடெக்சன் எதிர்பார்க்கலாம்.
இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII போனில் 4 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்களுடன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. 6 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்களையும் கொடுக்கிறது. அல்ட்ரா பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (3nm Octa Core Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது.
பிரீமியம் போன்களில் கிடைக்க கூடிய அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு சப்போர்ட் உள்ளது. 6.5 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz மோஷன் பிளர் ரெடக்சன் கிடைக்கிறது. மேலும், 240Hz டச் ஸ்கேனிங் ரேட் உள்ளது.
ப்ரன்ட்&ரியரில் லைட் சென்சார் கிடைக்கிறது. சன்லைட் விஷன் சப்போர்ட் உள்ளது. இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. எக்ஸ்மோர் டி (Exmor T) சென்சார், ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி கொண்ட 48 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.
இதுபோக 48 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் எக்ஸிமோர் ஆர்எஸ் (Exmor RS) சென்சார் கொண்ட 12 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் ஜீஸ் (ZEISS) குவாலிட்டி லென்ஸ் அவுட்புட் கிடைக்கும். 7.1X ஆப்டிகல் ஜூமிங், 21.3X ஹைபிரிட் ஜூமிங் கிடைக்கிறது. எக்ஸிமோர் ஆர்எஸ் சென்சாருடன் 12 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.
இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII போனில் 5000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரிக்கு கியூஐ வயர்லெஸ், பேட்டரி ஷேர் சப்போர்ட் உள்ளது. இப்போது, யுகே, ஐரோப்பா நாடுகளில் வெளியாகி இருக்கிறது. இந்திய ரூபாய் அடிப்படையில், ரூ.1,56,690ஆக விலை இருக்கிறது. ஜூன் 4ஆம் தேதி விற்பனை தொடங்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








