Home
Mobile

மார்க்கெட்டே மிரள போகுது.. 12ஜிபி ரேம்.. 48எம்பி கேமரா.. வருகிறது புதிய Sony ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

சோனி நிறுவனம் தனது சோனி எக்ஸ்பீரியா 1 VII (Sony Xperia 1 VII) போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் மே 15-ம் தேதி இந்த புதிய சோனி ஸ்மார்ட்போன் ஜப்பானில் அறிமுகமாகும் என்று ஆன்லைனில் தகவல் கசிந்துள்ளது. ஆனாலும் சோனி நிறுவனம் இந்த புதிய போனின் அறிமுகம் குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சோனி எக்ஸ்பீரியா 1 VII அம்சங்கள் (Sony Xperia 1 VII Specifications): 6.5-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 16:5:9 அஸ்பெக்ட் ரேசியோ (aspect ratio), 4கே ரெசல்யூஷன் (4K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

மார்க்கெட்டே மிரள போகுது.. வருகிறது புதிய Sony ஸ்மார்ட்போன்..

அதேபோல் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் வழங்கும்

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில்சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

குறிப்பாக OIS ஆதரவு கொண்ட48எம்பி மெயின் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ் (ultra-wide lens), 12எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் (periscope telephoto lens) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனில் 5000mAh பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் வசதி உள்ளது. மேலும் இரண்டு முன்புற ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Dual front-firing speakers), ஹைப்ரிட் சிம் ஸ்லாட் (hybrid SIM slot) ஆதரவுகளுடன் இந்த சோனி போன் அறிமுகமாகும்.

அதேபோல் இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சோனி நிறுவனம். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: @onleaks x xpertpick.com

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Xperia 1 VII launch date leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X