Home
Mobile

இதுதான் புது Sony ஸ்மார்ட்போன்.. 30W சார்ஜிங்.. 48எம்பி கேமரா.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சோனி எக்ஸ்பீரியா 1 VII (Sony Xperia 1 VII) ஸ்மார்ட்போனை விரைவில் உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது சோனி நிறுவனம். தற்போது சான்றிதழ் தளத்தில் XQ-FSxx என்ற மாடல் நம்பர் உடன் இந்த போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த சோனி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

அதேபோல் சோனி எக்ஸ்பீரியா 1 VII படங்கள் கூட தற்போது ஆன்லைனில் வெளியாகி உள்ளது. குறிப்பாக ட்ரிபிள் ரியர் கேமராக்கள் இந்த போனில் உள்ளன. மேலும் பிளாக் ( black), நேவி கிரீன் (navy green), பர்பிள் (purple) உள்ளிட்ட நிறங்களில் இந்த புதிய சோனி ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏற்கனவே ஆன்லைனில் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

இதுதான் புது Sony ஸ்மார்ட்போன்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

சோனி எக்ஸ்பீரியா 1 VII அம்சங்கள் (Sony Xperia 1 VII Specifications): சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் வழங்கும்.

குறிப்பாக 6.5-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 16:5:9 அஸ்பெக்ட் ரேசியோ (aspect ratio), 4கே ரெசல்யூஷன் (4K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட 48எம்பி மெயின் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ் (ultra-wide lens), 12எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் (periscope telephoto lens) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனில் 5000mAh பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

இந்த போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் வசதி உள்ளது. மேலும் இரண்டு முன்புற ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Dual front-firing speakers), ஹைப்ரிட் சிம் ஸ்லாட் (hybrid SIM slot) ஆதரவுகளுடன் இந்த சோனி போன் அறிமுகமாகும். குறிப்பாக அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

source 1, 2

photo credit: sumahodigest

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Xperia 1 VII images and specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X