Home
Mobile

வா தலைவா வா.. 512ஜிபி மெமரி.. OLED டிஸ்பிளே.. புதிய Sony ஸ்மார்ட்போன் ரெடி.. எந்த மாடல்?

கடந்த ஆண்டு வெளியான சோனி எக்ஸ்பீரியா 1 VI (Sony Xperia 1 VI) ஸ்மார்ட்போனுக்கு உலக சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிலையில் சோனி எக்ஸ்பீரியா 1 VII (Sony Xperia 1 VII) ஸ்மார்ட்போனை மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சோனி நிறுவனம். அதாவது வரும் மே மாதம் இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். ட்ரிபிள் ரயர் கேமராக்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக பின்புற கேமரா பம்ப் (camera bump) தடிமன் 11 மிமீ ஆக உள்ளது. அதேபோல் தடிமனான பெசல்கள் உடன் இந்த போன் அறிமுகமாகும்.

வா தலைவா வா.. புதிய Sony ஸ்மார்ட்போன் ரெடி.. எந்த மாடல்?

டூயல் முன்புற ஃபயரிங் ஸ்பீக்கர்கள் (Dual front-firing speakers), ஹைப்ரிட் சிம் ஸ்லாட் (hybrid SIM slot) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போனின் வலது பக்கத்தில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் வசதியும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சோனி எக்ஸ்பீரியா 1 VII அம்சங்கள் (Sony Xperia 1 VII Specifications): 6.5-இன்ச் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 16:5:9 அஸ்பெக்ட் ரேசியோ (aspect ratio), 4கே ரெசல்யூஷன் (4K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் உடன் சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்தலாம். அதாவது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட் வழங்கும்.

குறிப்பாக 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) அடிப்படையாக கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

OIS ஆதரவு கொண்ட 48எம்பி மெயின் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா-வைடு லென்ஸ் (ultra-wide lens), 12எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் (periscope telephoto lens) என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஸ் மற்றும் ஏஐ அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

வா தலைவா வா.. புதிய Sony ஸ்மார்ட்போன் ரெடி.. எந்த மாடல்?

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா உடன் இந்த சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த போனில் 5000mAh பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 30W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

சோனி எக்ஸ்பீரியா 1 VII ஸ்மார்ட்போன் ஆனது USD 1,399 (இந்திய மதிப்பில் ரூ.1,19,60) விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

photo credit: @ONLEAKS x XPERTPICK.Com, xpertpick, fonearena

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Xperia 1 VII 5G full specifications and images leaked online : Check All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X