Home
Mobile

கேமரா மார்கெட் ஆடிபோச்சு.. எக்ஸ்மோர் சென்சார்.. ரியல்-டைம் டிராக்கிங்.. 21.3X ஜூமிங்.. எந்த மாடல்?

ஆப்பிள், சாம்சங் போன்களின் கேமராக்களுக்கு துளியும் குறைவில்லாத பீச்சர்களுடன் சோனி எக்ஸ்பீரியா 1 VI (Sony Xperia 1 VI) போன் வெளியாகி இருக்கிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, 12 ஜிபி ரேம், கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் என்று மற்ற அம்சங்களிலும் மிரளவிட்டுள்ளது.

சோனி எக்ஸ்பீரியா 1 VI அம்சங்கள் (Sony Xperia 1 VI Specifications): இந்த சோனியில் 6.5 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) ஓஎல்இடி எச்டிஆர் (OLED HDR) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz பிளர் ரெடக்சன் சப்போர்ட் வருகிறது.

கேமரா மார்கெட் ஆடிபோச்சு.. எக்ஸ்மோர் சென்சார்.. ரியல்-டைம் டிராக்கிங்!

மேலும், 240Hz டச் சாம்பிளிங் ரேட், டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 புரொடெக்சன் (Corning Gorilla Glass Victus 2 Protection) வருகிறது. 3 வருடங்களுக்கான ஓஎஸ் அப்கிரேட் மற்றும் 2 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட் (Security Updates) உடன் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது.

இந்த சோனி எக்ஸ்பீரியா போனில் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8 Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் அட்ரினோ 750 ஜிபியு (Adreno 750 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வருகிறது. 1.5 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் வருகிறது.

கேமரா பீச்சர்களில் மிரளவிட்டுள்ளது. எக்ஸ்மோர் டி சென்சார் (Exmor T Sensor) கொண்ட 48 எம்பி மெயின் கேமரா வருகிறது. இந்த கேமராவில் ஹைபிரிட் ஓஐஎஸ் (OIS) மற்றும் ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி சப்போர்ட் வருகிறது. 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 12 எம்பி டெலிபோட்டோ லென்ஸ் வருகிறது.

கேமரா மார்கெட் ஆடிபோச்சு.. எக்ஸ்மோர் சென்சார்.. ரியல்-டைம் டிராக்கிங்!

இந்த டெலிபோட்டோவில் எக்ஸ்மோர் ஆர்எஸ் (Exmor RS) சென்சார் வருகிறது. 7.1 எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 21.3 எக்ஸ் ஹைபிரிட் ஜூம் கொண்டிருக்கிறது. ரியல்-டைம் ஐ ஆட்டோபோகஸ் (Real-Time Eye Autofocus), ரியல்-டைம் டிராக்கிங் (Real-Time Tracking) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

ஆகவே, அல்ட்ரா பீரிமியம் போட்டோ மற்றும் வீடியோ அவுட்புட் இந்த சோனி மாடலில் எதிர்பார்க்கலாம். அதேபோல எக்ஸ்மோர் ஆர்எஸ் சென்சார் கொண்ட 12 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த கேமராவில் வைடு ஆங்கிள் லென்ஸ் மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் வருகிறது.

இந்த சோனியின் ஆடியோவை பார்க்கையில், 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack), 360 ரியாலிட்டி ஆடியோ (Reality Audio), 360 ஸ்பாஷியல் சவுண்ட் (Spatial Sound) மற்றும் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) வருகிறது. அதேபோல ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஸ்டீரியோ ரெக்கார்டிங் (Stereo Recording) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

IPX5 மற்றும் IPX8 வாட்டர் ரெசிஸ்டன்ட், IP6X டஸ்ட் ப்ரூப் வருகிறது. 30W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் எக்ஸ்பீரியா அடாப்டிவ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி பேட்டரி வருகிறது. கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் (Qi Wireless Charging), பேட்டரி ஷேர் ஃபங்ஷன் (Battery Share Function) சப்போர்ட் வருகிறது.

பிளாக் (Black), பிளாட்டினம் சில்வர் (Platinum Silver), காக்கி கிரீன் (Khaki Green) ஆகிய 3 கலர்களில் வருகிறது. இந்த சோனி போனில் ஆரம்ப விலை ரூ.1,26,500ஆக இருக்கிறது. யுகே மற்றும் ஐரோப்பாவில் வரும் ஜூன் 3ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. அதன்பிறகு மற்ற நாடுகளில் வெளியாகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Xperia 1 VI With 12GB RAM, 48MP Camera Sale From June 3 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X