Home
Mobile

மே 15 உறுதி.. 2K டிஸ்பிளே.. டெலிபோட்டே லென்ஸ்.. வருகிறது சோனி ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

சோனி நிறுவனம் வரும் மே15-ம் தேதி எக்ஸ்பீரியா தயாரிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிகழ்வில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த சோனி எக்ஸ்பிரீயா 1 VI பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனும் (Sony Xperia 1 VI flagship) அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சோனி நிறுவனத்தின் வெளியீட்டு நிகழ்வு மே 15-ம் தேதி மாலை 4 மணி அளவில் யூட்யூப் தளத்தில் நேரலையில் ஒளிபரப்பப்படும். குறிப்பாக அறிமுகத்திற்கு முன்பே சோனி எக்ஸ்பிரீயா 1 VI போனின் அம்சங்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மே 15 உறுதி.. 2K டிஸ்பிளே.. வருகிறது சோனி ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

சோனி எக்ஸ்பிரீயா 1 VI அம்சங்கள் (Sony Xperia 1 VI specifications): குவாட் எச்டி பிளஸ் (Quad HD+)2கே டிஸ்பிளே வசதியுடன் சோனி எக்ஸ்பிரீயா 1 ஏஐ போன் வெளிவரும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 3200 x 1440 பிக்சல்ஸ், 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், BRAVIA HDR மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இதன் டிஸ்பிளே.

சோனி எக்ஸ்பிரீயா 1 ஏஐ போன் 48எம்பி Exmor T sensor + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + டெலிபோட்டே லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வெளிவரும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

மே 15 உறுதி.. 2K டிஸ்பிளே.. வருகிறது சோனி ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

தரமான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட் வசதியுடன் புதிய சோனி எக்ஸ்பிரீயா 1 VI போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சோனி எக்ஸ்பிரீயா 1 VI போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு சோனி எக்ஸ்பிரீயா 1 VI போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சோனி நிறுவனம்.

மே 15 உறுதி.. 2K டிஸ்பிளே.. வருகிறது சோனி ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

5000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் சோனி எக்ஸ்பிரீயா 1 VI ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

சோனி எக்ஸ்பிரீயா 1 VI ஸ்மார்ட்போனில் AI அம்சங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், வைஃபை, உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் தான் அறிமுகமாகும். ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Sony Xperia 1 VI Launch Date Revealed: check specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X