சர்வதேச பயணம் மேற்கொள்ள வரும் புதிய சோனி ஸ்மார்ட் போன்

Posted By: Staff
சர்வதேச பயணம் மேற்கொள்ள வரும் புதிய சோனி ஸ்மார்ட் போன்
சில நிறுவனத்தின் பெயரை சொன்னாலே வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த சாதனையையும் புட்டு புட்டு வைக்கின்றனர். இதற்கு காரணம் அந்நிறுவனத்தின் தறமான படைப்பு மட்டுமே.

தரமான தொழில் நுட்பத்தை வழங்கினால் போதும், வாடிக்கையாளர்கள் நிச்சயம் அந்த பொருட்களை வாங்காமல் இருப்பதில்லை. அந்த அடிப்படையில் சோனி நிறுவனத்தின் தரமான படைப்புகளை பற்றி கூற வேண்டியதே இல்லை.

இது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த வகையில், சோனி வாக்மேன் என்டபிள்யூ இசட்-1060 என்ற புதிய மொபைலை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது சோனி நிறுவனம்.

மக்களை ஆர்வம் கொள்ள வைக்கும் பல அரிய படைப்புகள் இந்த புதிய மொபைலில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய மொத்த எடையே 156 கிராம் தான்.

எளிதாக கையாளும் வகையில் இந்த மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு புதிய மொபைலை பற்றி தெரிந்து கொள்ளுகையில் அதன் தொழில் நுட்பத்தில் தான் அனைத்து மக்களின் ஆர்வமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த வாக்மேன் என்டபிள்யூ இசட்-1060 மொபைலை பொருத்த வகையில் தொழில் நுட்பத்தினை பற்றிய கவலை இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்று தான் கூற தோன்றுகிறது.

ஆன்ட்ராய்டு 2.3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் நூதனம், வாடிக்கையாளர்களை இந்த புதிய மொபைலின் மேல் மோகம் கொள்ள வைக்கும் என்று கூறலாம்.

இதனுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் எந்த விதமான சிரமும் இல்லாமல் இயங்க, இதன் 1,000 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட என்விஐடிஐஏ டெக்ரா 2.250 ஏபி20எச் சிப்செட் மைக்ரோ பிராசஸர் பெரும் அளவில் உதவுகிறது.

இந்த மொபைலில் எல்லாமே உயர்ந்த தொழில் நுட்பங்கள்தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சோனி மொபைலினுடைய வெளித் தோற்றம் நுணுக்கமாகவும், அழகுடனும் மிக துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் யூஎஸ்பி 2.0 போர்ட், புளுடுத் வைபை போன்ற வசதிகளையும் பெற முடியும்.

நாள் முழுவதும் இசை கேட்டு மகிழ எப்எம் ரேடியோவும், வீடியோ அவுட்புட் வசதிக்காக மினி-எச்டிஎம்ஐ அவுட்புட் போர்ட் வசதியும், அதிக பட்சம் 32ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த லித்தியம்-அயான் பேட்டரி 8 மணி நேரம் தொடர்ந்து உழைக்கும் தன்மை கொண்டது.

இந்த ஆன்ட்ராய்டு வசதி கொண்ட சோனி வாக்மேன் என்டபிள்யூ இசட்-1060 மொபைலின் விலை இன்னும் அறிவிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது.

வாங்குவோரின் இதயம் கவர்கின்ற வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைலின் விலையும் அனைவரையும் கவர்கின்ற வகையில் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot