போட்டிக்கு வரிந்துகட்டும் எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்கள்!

By Super
|
போட்டிக்கு வரிந்துகட்டும் எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்கள்!

மூன்று எக்ஸபீரியா வரிசை ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் வெளியிடுவதாக சோனி நிறுவனம் அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்டு்ள்ளது.

ஸ்மார்ட்போன்களுடன் போட்டா போட்டி நடத்த தயாராகி கொண்டிருந்த எக்ஸ்பீரியா-யூ, எக்ஸ்பீரியா-பி, எக்ஸ்பீரியா சோலா ஸ்மார்ட்போன்கள் இந்த மாதம் வெளியிடப்படும். இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விவரம் பற்றிய தகவல்களும் கூட ஒருவாறு வெளியாகி உள்ளது. 3.5 இஞ்ச் டிஎப்டி திரை வசதி கொண்ட இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு 2.3 இயங்குதளத்தினை கொண்டு இயங்கும்.

எக்ஸ்பீரியா-யூ ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளம் அப்கிரேடு செய்யப்படும். இதனால் இன்னும் கூடுதல் தொழில் நுட்ப வசதிகளையும் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் 16 X டிஜிட்டல் சூமிங் வசதியினையும் வழங்கும்.

அதோடு சோனி எக்ஸ்பீரியா-யூ ஸ்மார்ட்போன் லெட் ஃபிளாஷ் வசதியினால் குறைந்த வெளிச்சத்திலும் தெளிவான புகைப்படத்தினை கொடுக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த எக்ஸ்பீரியா-யூ ஸ்மார்ட்போன் ரூ.17,399 விலை கொண்டதாக இருக்கும்.

இது போல் இன்னும் பல புதிய தொழில் நுட்பங்களை வழங்கும் எக்ஸ்பீரியா-பி ஸ்மார்ட்போன் ரூ.26,799 விலையையும், எக்ஸ்பீரியா சோலா ஸ்மார்ட்போன் ரூ.20,449 விலையை கொண்டதாகவும் இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X