புதிய அப்டேஷன் வசதிகளை வழங்க சோனி அறிவிப்பு!

எக்ஸ்பீரியா வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அடுத்தடுத்து அறிமுகம் செய்தது மட்டுமல்லாமல், அதில் நிறைய எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷன் வசதியினை வழங்குவதாக தனது ப்ளாகில் தெரிவித்திருக்கிறது சோனி நிறுவனம்.
எக்ஸ்பீரியா பி, எக்ஸ்பீரியா ஆர்க், எக்ஸ்பீரியா எஸ், எக்ஸ்பீரியா நியோ வி மற்றும் எக்ஸ்பீரியா ரே ஆகிய ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் வசதியினை வழங்கியது சோனி நிறுவனம்.
இது அல்லாமல் எக்ஸ்பீரியா மினி, எக்ஸ்பீரியா ப்ரோ, எக்ஸ்பீரியா ஏக்டிவ் ஆகிய ஸ்மார்ட்போன்களில் ஐஸ்சிஎஸ் அப்டேஷனை வழங்குவதாகவும் தனது ப்ளாகில் குறிப்பிட்டிருக்கிறது சோனி நிறுவனம்.
எச்டிசி நிறுவனம் தனது நிறைய ஸ்மார்ட்போன்களில் ஐஸ் கிரீம் சான்ட்விச் அப்டேஷனை வழங்கியது. எச்டிசி நிறுவனத்தை அடுத்து, சோனி நிறுவனமும் ஐசிஎஸ் அப்டேஷன் வசதியினை வழங்கி வருகிறது.
இதனால் ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு அப்டேஷன் வசதியினை எதிர்பார்க்கும் நிறைய வாடிக்கையாளர்களுக்கு இந்த அப்டேஷன் வசதி சிறப்பான பயன்பாட்டினை கொடுப்பதாக இருக்கும்.
சோனி எக்ஸ்பீரியா ஜே மற்றும் எக்ஸ்பீரியா டிப்போ ஸ்மார்ட்போன்களிலும் இந்த ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை சோனி நிறுவனம் வழங்கும்.


Click it and Unblock the Notifications