Home
Mobile

எக்ஸ்பீரியாவுக்கு புதிய ஆன்ட்ராய்டு சாப்ட்வேரை அப்க்ரேட் செய்யும் சோனி!

By Karthikeyan
எக்ஸ்பீரியாவுக்கு புதிய ஆன்ட்ராய்டு சாப்ட்வேரை அப்க்ரேட் செய்யும் சோனி!

சோனி தனது எக்பீரியா எஸ் ஸ்மார்ட்போனை தனது தயாரிப்பின் சிகரமாக கருதியது. ஆனால் இந்த எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் வரும் என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் சோனி இந்த சாதனத்தில் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தை வைத்தது. அதனால் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றம் ஏற்பட்டது. அதனால் விற்பனையிலும் தான் எதிர்பார்த்ததை சோனி அடைய முடியவில்லை.

இதை உணர்ந்த சோனி தற்போது இந்த எக்ஸ்பீரிய எஸ் ஸ்மார்ட்போனுக்கு இந்த ஆண்டி இறுதியில் ஆன்ட்ராய்டு 4.0.4 ஐசிஎஸ் அப்க்ரேடைச் செய்ய இருக்கிறது. இந்த அப்க்ரேட் மூலம் ஒரு சில மீடியோ அப்ளிகேசன்களும் இந்த ஸ்மார்ட் போனில் வரும்.

குறிப்பாக இந்த அப்க்ரேட் மூலம் மீடியா அப்ளிகேசன்களான வாக்மேன் மற்றும் திரைப்படங்கள் போன்றவற்றை இந்த ஸ்மார்ட்போனில் அக்சஸ் செய்ய முடியும். அதுபோல் ஆல்பம் அப்ளிகேசன் என்ற ஒரு புதிய அப்ளிகேசனும் இந்த ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய அப்ளிகேசன் மூலம் ப்ரவ்சிங், எழுதுதல், பேஸ்புக்கிலிருந்து நேரடியாக போட்டோ பகிர்வு போன்ற அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

மேலும் இந்த அப்க்ரேட் மூலம் எக்ஸ்பீரியாவில் யுடியூப் சேனலை நேரடியாக பார்க்க முடியும். சோனியின் இந்த புதிய அப்க்ரேடுக்காக சோனி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X