சோனியின் புதிய உயர்ரக ஸ்மார்ட்போன்!

Posted By: Karthikeyan
சோனியின் புதிய உயர்ரக ஸ்மார்ட்போன்!

நெடுங்காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்பீரியா எஸ்எல் ஸ்மார்ட்போனை ஒரு வழியாக சோனி விரைவில் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சோனி எக்ஸ்பீரிய எஸ் ஸ்மார்ட்போனைவிட மேம்பட்ட வசதிகளுடன் வருகிறது.

இந்த எக்ஸ்பீரிய எஸ்எல் ஸ்மார்ட்போன் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 4.3 இன்ச் கீறல் தடுப்பு வசதி கொண்ட டிஎப்டி தொடுதிரை மிகத் துல்லியமாக இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்குதளம் மற்றும் 1.7 ஜிஹெர்ட்ஸ் க்வல்காம் எம்எஸ்எம்8260 டூவல் கோர் ப்ராசஸர் ஆகியவற்றுடன் வருவதால் இந்த ஸ்மார்ட்போன் திறம்பட மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.

இதன் 12.1 எம்பி கேமரா ஆட்டோ போக்கஸ் மற்றும் எல்இடி ப்ளாஷ் போன்றவைக் கொண்டிருப்பதால் மற்ற டிஜிட்டல் கேமரா எடுக்கும் அளவுக்கு மிகத் தெளிவான படங்களையும் வீடியோக்களையும் எடுக்கும் திறன் கொண்டுள்ளது.

மேலும் இந்த எஸ்எல் போன் 27.8ஜிபி இன்டர்னல் சேமிப்பையும் 1ஜிபி ரேமையும் இந்த போன் கொண்டிருக்கிறது. அதனால் இந்த ஸ்மார்ட்போனில் ஏராளமான பைலைகளை சேமித்து வைக்க முடியும்.

இந்த போனின் விலை மற்றும் விற்பனைக்கு வரும் தேதியை இன்னும் சோனி அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் விரைவில் வந்துவிடும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்