திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. SONY-யின் 2 புதிய Xperia ஸ்மார்ட்போன்கள் அறிமுகத்திற்கு ரெடி.. எப்போது?
சோனி (SONY) தனது நெக்ஸ்ட் ஜெனரேஷன் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன்களில் பணியாற்றி வருவதாக தெரிகிறது. அடுத்துவரும் எக்ஸ்பீரியா சீரிஸின் கீழ் சோனி எக்ஸ்பீரியா 1 VIII மற்றும் எக்ஸ்பீரியா 10 VIII ஆகிய இரண்டு மாடல்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாடல்களின் அறிமுகத்தை உறுதி செய்யும்படியாக, இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே IMEI தரவுத்தளத்தில் காணப்பட்டுள்ளன. இது உலகளாவிய சந்தைகளில் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் உடனடி வெளியீட்டை குறிக்கிறது. எக்ஸ்பீரியா 1 VIII ஆனது பிளாக்ஷிப் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்பால் இயக்கப்படலாம் என்றும், எக்ஸ்பீரியா 10 VIII ஒரு மிட்ரேன்ஜ் மாடலாக வரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சோனி நிறுவனம் இன்னுமும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களையும், இவற்றின் அறிமுகத்தையும் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் Xperia 1 VIII மாடல் ஆனது கடந்த மே 2025 இல் உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்பீரியா 1 VII மாடலின் அப்கிரேடெட் வெர்ஷன் ஆக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
நினைவூட்டும் வண்ணம் எக்ஸ்பீரியா 1 VII ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் FHD+ (1080 x 2340 பிக்சல்ஸ்) டிஸ்பிளே, 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ், Snapdragon 8 Elite சிப்செட், 48-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடனான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 30W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
மறுகையில் உள்ள எக்ஸ்பீரியா 10 VII மாடல் ஆனது கடந்த செப்டம்பர் 2025 இல் அறிமுகமான எக்ஸ்பீரியா 1 VII மாடலின் 10 VII மாடலின் தொடர்ச்சியாக இருக்கலாம். நினைவூட்டும் வண்ணம் எக்ஸ்பீரியா 1 VI ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.1-இன்ச் FHD+ (1080 × 2340 பிக்சல்ஸ்) OLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 20W பாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில் - சோனி நிறுவனம் அதன் எக்ஸ்பீரியா 1 VII மற்றும் எக்ஸ்பீரியா 10 VII ஆகியவற்றை தனித்தனி மாதங்களில் அறிமுகப்படுத்தியது. இந்த ஆண்டும் சோனி நிறுவனம் இந்த இரட்டை வெளியீட்டு உத்தியை பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலதிக விவரங்கள் கிடைத்தால் உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.
வேறு என்னென்ன ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்? சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) பிப்ரவரி 25, 2026 அன்று அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் வெளியீடுகளில் ஒன்றாகும். அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி இன்னும் மறைக்கப்பட்ட நிலையில், வலுவான லீக்ஸ் இது பிப்ரவரி 25 ஆம் தேதி அன்று நடக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கின்றன.
"வழக்கம் போல" சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus) மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26 Ultra) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.
ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனானது பிப்ரவரி 24, 2026 அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. விவோ வி70 சீரீஸ் (Vivo V70 Series) 2026 பிப்ரவரி மாத நடுப்பகுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோவின் பிரபலமான இந்த வி-சீரிஸின் கீழ் இரண்டு புதிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் - அவைகள் விவோ வி70 மற்றும் விவோ வி70 எலைட் மாடல்கள் ஆகும்.
கூகுள் பிக்சல் 10ஏ (Google Pixel 10a) பிப்ரவரி 2026 ல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமாக பிப்ரவரி மாத வாக்கில் கூகுள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை பிக்சல் மாடல் ஆனது வெளியாகி இருக்கும். ஆகவே இந்த ஆண்டும் அதை நாம் எதிர்பார்க்கலாம். ஆப்பிள் ஐபோன் 17இ (Apple iPhone 17e) பிப்ரவரி 2026 இல் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








