2018 : பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம்.!
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சோனி நிறுவனம் அடுத்த ஆண்டு துவகத்தில் எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் ஸ்மார்ட்போனின் மாடல் எண் எச்8541-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் ஆன்லைனில் இந்த ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் வெளிவந்துள்ளது.

டிஸ்பிளே :
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.7-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 4கே ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

பெசல்-லெஸ்:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை பெசல்-லெஸ் வடிவமைப்பை கொண்டுள்ளது, அதன்பின்பு சோனி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 835:
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3420எம்ஏஎச்:
எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட் பிரீமியம் ஸ்மார்ட்போனில் 3420எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications