Home
Mobile

கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 & எக்ஸ்ஏ2 அல்ட்ரா.!

எக்ஸ்பிரீயா எக்ஸ்ஏ2 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.

By Prakash

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 & எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 .!

எக்ஸ்பிரீயா எக்ஸ்ஏ2 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.2-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் 6.0-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பை கொண்டு வெளிவரும். மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 1080பிக்சல் தீர்மானம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலியைக் கொண்டு வெளிவரும், அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் செயல்படும்.

கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 .!

எக்ஸ்பிரீயா எக்ஸ்ஏ2 ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் எக்ஸ்ஏ2 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது.

வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.

கைரேகை சென்சார் வசதியுடன் வெளிவரும் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ2 .!

இரண்டு ஸ்மார்ட்போன்களில் 21மெகாபிக்சல் ரியர் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்டு இந்த
ஸ்மார்ட்போன்கள் வெளிவரும்.

இரண்டு ஸ்மார்ட்போன்களில் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 4கே வீடியோ பதிவு வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்.

Best Mobiles in India

English summary
Sony is finally shipping a fingerprint sensor on a phone in the US; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X